கிருஷ்ணகிரி, நவ.22 - ஓசூர் நகரின் மையத்தில் தேன்கனிக் கோட்டை பிரதான சாலையில் அரசின் நிதி உதவி பெறும் ஜான்போஸ்கோ பள்ளி 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாண வர்கள் இங்கு படித்து வருகின்றனர.இதே சாலையில் இப்பள்ளியையொட்டி 5 பெரிய மருத்துவமனைகளும்,பல ஸ்கேன் சென்டர்களும்,அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும,பல வணிக வளா கங்களும் உள்ளன.எதிரில் 50 ஆண்டுகள் பழமையான சாந்தி நகர் கிழக்கு பகுதி மக்கள், வாகனங்கள் நடமாட்டம் அடர்த்தியாக உள்ள பகுதியாகும். இப்பள்ளியில் காலை,மாலையில் மாண வர்களை கூட்டிக் கொண்டு வந்து விடு வதற்கும் கூட்டி செல்வதற்கும் ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்கள் நடந்தும் இரு சக்கர வாகனத்திலும் வந்து செல்கின்றனர். இச்சாலையில் அரசு நகரப் பேருந்துகளும், டாட்டா, மிண்டா, டிவிஎஸ, அசோக் லேலண்ட் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருந்துகள் நூற்றுக்கணக்கில் மூன்று வேலைகளிலும் வந்து சென்று கொண்டே இருக்கும.பல நாட்களில் விபத்துகளும் நடந்து வரு கின்றன. இப்படியான போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் இப்பகுதியில் பல நாட்கள் போக்குவரத்தை நெறிப்படுத்தும் காவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை காவல்காரிடம் கேட்டதில் கடலில் உரைத்த பெருங்காயமாக மிக மிக குறைந்த அளவே காவலர்கள்பல பேர் பல பேர் கடும் பணி சுமை காரண மாக மனஉளைச்சலுக்கு ஆளாகி வரு கின்றனர். மக்கள் பாதுகாப்பு தேவைக்கேற்ப என்பதற்கு பதிலாக தேவையில் 10 விழுக்காடு அளவு கூட போக்கு வரத்து காவல் துறையினர் ஓசூரில் நியமிக்கப்படவில்லை. முன்பெல்லாம் மக்கள் தொகை, வாகன நெரிசலை, கட்டுப்படுத்த நெருக்கடி, பகுதி களில் பணி புரிய ஊர்க்காவல் படையினர் என பலரை எடுத்து இப்பணி செய்ய வைத்துக்கொண்டி ருந்தனர்.தற்போது அவர்கள் கூட காண கிடைப்பதில்லை. எனவே நகரின் வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப என்பதில் 10 சதவீதம் கூட போக்குவரத்து கட்டுப் பாட்டிற்கு காவலர்கள் ஊர் காவலர் கள் படையினர் இல்லாததே இந்தபோக்கு வரத்து நெரிசலுக்கு பிரதான காரணமாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் எனவே நகரின பிரதான சாலைகளில் தினமும் காலை மாலை இரு வேளை களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க காவலர்களை, ஊர்க்காவல் படையினரை பணியில் அமர்த்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை தடுப்ப தற்கான சரியான முன் முயற்சி எடுக்க வேண்டும் இப்பகுதி மக்களும,பெற்றோர் களும், மாணவர்களும் தடுப்பு காவலர் களை உடனடியாக அதிகப்படுத்திட வேண்டும். இது ஓசூர் நகரின் பிரதான சாலைகளில் ஏற்பட்டு வரும் விபத்து களை,போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇப்பள்ளிக்கு ஒரு மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
