சிதம்பரம், நவ.22- புவனகிரி தாலுக்கா மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புவனகிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணவாளன் தலைமை தாங்கி னார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்பு தாஸ், ஜெபகனி, ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோ.மாதவன் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பராயன், ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காளி. கோவிந்தராசு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சதானந்தம், ஸ்டாலின் ஆகியோர் பேசினர். இதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும், மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்க ளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தினமும் ஆயிரம் புற நோயாளி கள் வரும் நிலையில் அதற்கேற்ப செவி லியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.
