districts

img

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி ஓசூர் வருகை மாபெரும் கபடிப் போட்டிக்குத் தீவிர ஏற்பாடுகள்

கிருஷ்ணகிரி, நவ. 22: தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் 27ஆம் தேதி ஓசூர் நகருக்கு வருகை தர இருக்கிறார். அவரது வரு கையை ஒட்டி நகரில் பல்வேறு நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. இவ்விழாவின் ஒரு பகுதியாக, மூன்று நாட்கள் கபடிப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதற்கான விளையாட்டு அரங்கம் அப்பாவு நகர் எதிரில், பிருந்தா வனம் பள்ளிகளின் உரிமையாளர் சேகர் அவர்களால் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் அவர்கள் இந்த அரங்கப் பணிகளைத் தொடங்கி வைத்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் 8000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த அரங்கில், 40 ஆண்கள் கபடி விளையாட்டுக் குழுக்களும் 4 பெண்களின் முக்கியக் குழுக்களும் விளையாடத் தயாராக உள்ளன. அரங்கை அமைத்தது குறித்துப் பிருந்தாவனம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. சேகர் விளக்கினார். ஓசூர் மாநகருக்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருவதை யொட்டிச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் தெரி வித்தார். விழா ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இறுதி கட்டப் பணிகளை விரைந்து முடிக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்த் அய்யா, ஒன்றிய, மாநகர, மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய ஊராட்சி, மாநகரத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.