ஆபத்தை விளைவிக்கக்கூடிய 20 தொழில்களில் பெண் தொழிலாளர்களை பணியமர்த்தலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்க உழைக்கும் பெண்கள் அமைப்பின் தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரையும் சந்தித்து மனு அளித்தனர்.
