districts

img

கடலூர் வந்தது ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை

கடலூர், நவ.22- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியா ஆக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பைக்கான போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.  கடந்த 10-ந் தேதி தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், சென்னை எழும்பூ ரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடி யத்தில் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.  அதன் தொடர் நிகழ்வாக உலக கோப்பை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பை அறிமுக விழா நடை பெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர்  மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆக்கி உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினர். இந்த கோப்பை வருகிற 25-ந் தேதியன்று சுற்றுப்பயணம் முடிந்து சென்னை செல்ல உள்ளது. மேலும் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பை போட்டியில் சுமார் 24 நாடுகள் பங்கேற்கவுள்ளது. தமிழ்நாட்டில் நடை பெறவுள்ள ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பை போட்டி சிறப்பாக நடை பெறவும், இந்திய அணியின் சார்பாக பங்கேற்கும் ஆக்கி வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன்,  வர்த்தக சங்கத் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.