districts

img

நவீன கருத்தடை இரு வார விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி, நவ.22 - கள்ளக்குறிச்சி இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதலின்படி ஆண்களுக்கான நவீன கருத்தடை இரு வார விழிப்புணர்வு ரதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் மாலினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குனர் மருத்துவர் பத்மாவதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி தேசிய சுகாதாரக் குடும்பம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மாவட்ட விரிவாக விரிவாக்க கல்வியாளர் புவனேஸ்வரி புள்ளி விவர உதவியாளர் சிவகுருநாதன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அலுவலர்கள் தலைமை மருத்துவ அலுவலர்கள் அனைத்து வட்டார அரசு மருத்துவமனைகளில் வட்டார மருத்துவ அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.