திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூலம் இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜே.மணிக்கண்ணன், ஒன்றிய குழு பெருந்தலைவர் இ.சாந்தி இளங்கோவன் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
