கள்ளக்குறிச்சி, நவ.22 - திருநாவலூர் ஊராட்சியில் திருநாவலூர் முருகன் கோவில் பகுதியில் இருந்து பத்தியாபேட்டை வரை சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை மிகவும் தரம் குறைவாகவும், அளவு குறைவாகவும் போடப்பட்ட தார் சாலை ஜல்லிகள் சில நாட்களிலேயே பெயர்ந்து போகிறது. தனியார் பள்ளி பேருந்துகளும், மாணவ மாணவியர் சைக்கிள்களும் செல்லும் இந்த சாலை சரியாக போடப்படவில்லை என இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் கொண்டு எனவே தரமற்ற தார் சாலையை அமைத்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தரமான தார் சாலையை அமைத்து தரும்படி சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
