districts

img

மேம்பாலம் அமைக்க உள்ளதை கைவிடக்கோரிக்கை

பல்லாவரம் கன்டோன்மெண்ட் வாரச்சந்தையை நடைபெறும் பகுதியில் மேம்பாலம் அமைக்க உள்ளதை கைவிடக்கோரி வெள்ளியன்று (நவ.21) சந்தையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பல்லாவரம் கன்டோன்மெண்ட் வார சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஒய்.இஸ்மாயின் நடைபெற்ற இந்த இயக்கத்தை சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஜி.பூமிநாதன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.