ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி கட்டணத்தை குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
திருப்பூர், ஜன.22– திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ள அபரிமித கட்ட ணத்தைப் பாதியாகக் குறைப்பது டன், இதர வசதிகளையும் நிறைவேற் றித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளை யம் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, திருப்பூர் மாநகரத்தில் மக்களுக்குப் பொழுது போக்கு வசதிகள் சொல் லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. வெள்ளிவிழா பூங்கா போக் குவரத்து நெருக்கடியுடன், குறுக லான இடத்தில் அமைந்துள்ளது. இது தவிர மாநகராட்சிக்கு உரிய ரிசர்வ் சைட்டுகளிலும் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. பூங்காக்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வ தற்கான மைதானங்கள் மற்றும் பொழுது போக்கு வசதிகளும் இல்லை. திரையரங்கங்களில் வரை முறை இல்லாமல் அபரிமித கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் நடத்தும் கண்காட்சிகள் வர்த்தக அடிப்படையில் மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக உள்ளன. இந்த சூழ்நிலையில், ஆண்டிபா ளையம் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. எனினும் இந்த படகு இல் லத்தில் மோட்டார் படகு 2, துடுப்புப் படகு 3 மற்றும் பெடல் படகு 8 என மொத்தம் 13 படகுகள் உள்ளன. இதில் மோட்டர் படகில் 20 நிமிட பய ணத்துக்கு ரூ.100, 4 இருக்கை பெடல் படகு மற்றும் 5 இருக்கைத் துடுப்புப் படகுகளில் 20 நிமிடப் பயணத்திற்கு நபர் ஒருவருக்கு ரூ.100, இரண்டு இருக்கை பெடல் படகில் 30 நிமிட சவாரிக்கு ரூ.150 வீதம் கட்டணம் நிர் ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நால்வர் கொண்ட குடும் பம் இங்கு படகு சவாரி செய்தால் குறைந்தது ரூ.400 செலவிட வேண் டும். இத்துடன் வாகன நிறுத்தக் கட்ட ணம், இதர செலவையும் சேர்த்தால் குறைந்தது ரூ.500 இல்லாமல் இங்கு வர முடியாது. திருப்பூர் மாநகரில் வேறு பொழு துபோக்கு வசதி இல்லாத நிலையில், ஆர்வத்துடன் வரக்கூடிய மக்க ளுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பது பெரும் சுமையாகும். சுற்றுலாத் தலங்க ளில் உள்ள படகு சவாரிகளுக்கு வசூ லிக்கப்படுவதை விட அதிக கட்ட ணம் இங்கு வசூலிக்கப்படுகிறது. எனவே பல லட்சம் உழைக்கும் மக் கள் வசிக்கும் திருப்பூரில் இந்த படகு சவாரிக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும். அத்துடன் விடுமுறை, பண்டிகை நாட்களில் ஆண்டிபாளையம் குளத் திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும், மங்கலம் சாலையில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண் டிபாளையம் குளம் பேருந்து நிறுத் தம் என்ற அறிவிப்பு செய்தும், திருப் பூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் பட்டி யலில் இணைத்தும் மாவட்ட நிர்வாக இணையதளம் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்ய வேண்டும். சாமா னிய மக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகராட்சி மற் றும் மாவட்ட நிர்வாகம் இவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.
சினிமா துறையில் வேலை எனக்கூறி ரூ.6.1 லட்சம் மோசடி
சினிமா துறையில் வேலை எனக்கூறி ரூ.6.1 லட்சம் மோசடி கோவை, ஜன.22- சினிமா துறையில் அழகுக் கலை நிபுணர் வேலை எனக் கூறி இளப்பெண்ணிடம் ரூ.6.1 லட்சம் மோசடி செய்த நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர். கோவை மாநகரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் டில் பணிக்கு சேர்ந்து கோவையில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேறு வேலை தேடியுள்ளார். அப்போது ஓ.எல்.எஸ் இணையத்தில் சினிமா துறை உதவி அழகுக் கலை நிபுணராக பணியாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், ஊதியம் ரூ.60 ஆயிரம் என விளம்பரம் வந்துள்ளது. இதனைக் கண்ட அப் பெண் விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், ரூ.7 லட்சம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம் பிய அப்பெண் தனது நகையை அடகு வைத்து ரூ.6.12 லட் சத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை அனுப்பிய நிலை யில் அந்த நபர் தனது செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். இதனையடுத்து, ஆன்லைன் மூலம் கோவை குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படை யில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் இருந்த கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (53) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். இவர்மீது கேரளா மாநிலத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பெண்ணை மோசடி செய்த பணத்தை செலவழிக்க பெங்களூரில் இருந்ததும் தெரி யவந்தது. மேலும் பிடிபட்ட சுரேஷ்குமாரிடம் இருந்து பல சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இதே போல வேறு யாரெல்லாம் ஏமாந்துள்ளனர் என்பதும் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்ற னர். சமீப காலமாக ஆன் லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பேராசையால் முதலீடு செய்வோர்கள் மட்டு மின்றி, வருவாய் இல்லாமல் கஷ்டபடும் நபர்களும், பகுதி நேர வேலைக்காக தேடுவோரையும் மோசடி கும்பல் விட்டு வைக்காமல் ஏமாற்றி வரும் சம்பவமும் அதிகரித்துள்ளது. எனவே ஆன்லைன் மூலம் வேலை தேடினாலும் யாருடைய வாக்குறுதியை நம்பியும் பணம் அனுப்ப கூடாது என போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டாக்ஸி ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம்
கோவை, ஜன.22- பைக் டாக்ஸி மற்றும் சொந்த வாகனங் களை வாடகைக்கு பயன்படுத்துதல் போன்ற வற்றை முறைப்படுத்த வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தனியார் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரம் முழுவதும் சுமார் 2000 திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக பைக் டாக்ஸி மற் றும் சொந்த வாகன பதிவெண் கொண்ட வாகனங்களை வாடகைக்கு இயக்குதல் போன்றவற்றால் வாடகைக்கு வாக னங்களை இயக்கும் டாக்ஸி உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பாதிப் புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், பைக் டாக்ஸி மற்றும் சொந்த வாகன பதி வெண் கொண்ட வாகனங்களை வாட கைக்கு இயக்கப்படுவதை கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் மாவட்ட ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில் புதனன்று ஒரு நாள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வசதியில்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி
சேலம், ஜன.22- சேலம் அரசு மருத்துவமனையின் மகப் பேறு சிகிச்சை பிரிவில் குடிநீர் வசதியில்லா ததால், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். சேலம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், நான்கு தளங்களில் செயல் பட்டு வருகிறது. தரைத்தளத்தில் பிரசவம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை, இரண்டாவது தளத்தில் பச்சிளம் குழந்தை கள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று, நான்கு தளங்களில் குழந்தைகள் காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஏராளமான கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்க ளுடன் உறவினர்கள் ஒருவர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்கு தளங்களிலும் குடி நீர் வசதி இல்லாததால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள், உறவினர்கள் மிகுந்த சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே, வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் உடைந்து காணப்படுவதால், மருத்துவ மனைக்கு வெளியே சென்று கடைகளில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. உணவு அருந்தும் போதும், கைகளை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் இல்லை. எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண் டும், என சிகிக்சை பெற்று வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் அருகே குவாரிகளில் 2 ஆம் நாளாக கனிமவளத் துறையினர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜன.22 - திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இரண்டாம் நாளாக கனிமவளத் துறையினர் புதன்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜகபர்அலி. சமூக ஆர்வல ரான இவர், அந்தப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததால், கடந்த ஜன.17 அன்று லாரி ஏற்றிக் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஆர்ஆர் கிரஷர் உரிமையாளர்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சூழலில் திருமயம் அருகே யுள்ள துளையானூர் பகுதியிலுள்ள இரு குவாரிகளை கனிமவளத் துறையி னர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த னர். இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளாக மலைக்குடிப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 5 குவாரிகளிலும் இந்தக் குழுவினர் புதன்கிழமையும் இரண்டாம் நாளாக ஆய்வு செய்தனர். கனிமவளத் துறை திருச்சி உதவி இயக்குநர் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநர் லலிதா, நாகை உதவி இயக்குநர் சுரதா உட்பட கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களைச் சேர்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், புவியியலாளர்கள் என 12 பேரைக் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடு பட்டுள்ளனர். எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ட்ரோன் கேமரா மூலமும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.