சேலம்,மே 5 - தமிழ்நாட்டில் மூன்றே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறுகிறார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 3 மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது.தமிழகத்தில் கல்விப்புரட்சியால் மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் தில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை. திறமையின் அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தில்லியில் பணிபுரிகின்றனர். இயற்கை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.3 எம்.எல்.ஏ. க்களுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. 3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று கூறிக்கொண்டார்.