கோயம்புத்தூர், ஜூன் 13– சாதி, மத, இனம் கடந்து ஒன்று பட்டு கண்ணீரும், செந்நீரும் சிந்தி போராடிப்பெற்ற இந்திய சுதந்தி ரத்தைப் பாதுகாக்க பாசிச புல்டோசர் மோடி அரசை வீழ்த்த ஒன்றுபடுவோம் என ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். கோவை காந்திபுரத்தில் மே பதி னேழு இயக்கம் சார்பில் ‘கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு’ என்கிற கருப்பொருளை மையக் கருத்தாக கொண்டு மாநாடு நடை பெற்றது. அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தர சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவள வன் எம்.பி, மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் ஜவாஹிருல்லா, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “18 ஆம் நூற்றாண்டில் துவங்கி 19 நூற்றாண்டு வரை முழுவதும் நடை பெற்ற 250 ஆண்டுகால விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு சொந்தக் காரர்கள் தமிழர்கள். அத்தகைய போராட்டத்தில் கோவையில் பாளை யக்காரர்கள், குறுநில மன்னர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய இயக்கங்கள் சுதந்திரப் போராட்டத்தில் முன்னின்றன. இந்திய விடுதலைப் போரில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர். கோவை மண்ணில் 1939இல் முதல் கோவை சதி வழக்கு கம்யூ னிஸ்ட் தலைவர்கள் மீது போடப் பட்டது. அந்நிய ஆட்சி அகற்றப்பட வேண்டும், வெள்ளையர்கள் விரட்டி யடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசுரம் வெளியிட்ட தற்காக இந்த சதி வழக்கு போடப் பட்டது. இதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 5 தோழர்கள் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டு காலம் சிறையில் சித்ரவதை அனு பவித்தார்கள். இதேபோன்று 1942ல் இரண்டாவது கோவை சதி வழக்கு போடப்பட்டு 9 கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இத்தகைய வீரம் சொறிந்த விடு தலைப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த கம்யூனிஸ்ட் இயக்க த்தின் தலைவர் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கடந்து இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை போலவே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு. இப்படி கண்ணீரும், செந்நீரும் சிந்தி போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம். அம்பேத்கர் தலைமை யிலான வரைவுக்குழு முன்மொழிந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தின் விழுமியங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுய சார்பு பொருளாதார கொள்கை ஆகிய அனைத்தையும் மோடி அரசு தகர்த்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாது காக்க பாஜகவின் பாசிச புல்டோசர் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தேசம் காப்போம்” என்றார். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளி ட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.