districts

img

பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுச்சேரி,ஜன.13- பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். எஸ்.ராமச்சந்திரன் எழுதிய “புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் தா.முருகன்” என்ற நூல் வெளியீட்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில் புதுவை யில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் நூலை வெளியிட, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.லீலாவதி, இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் சொ.பிரவீன் குமார் பெற்று கொண்டனர். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முதல் தலை முறையாக வாழ்ந்து மறைந்த தலைவர் வ.சுப்பையா போன்ற தலைவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின் வாயிலாக ஈர்க்கப்பட்டவர் முருகன்.  புதுச்சேரி பஞ்சாலை தொழி லாளியாக இருந்து தொழிற் சங்கம் என்ற பயிற்சி பட்டறை யில் கம்யூனிஸ்ட்டாக தேர்ச்சி பெற்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தென்னாற் காடு மாவட்டத்தின் மாவட்டக்குழு உறுப்பினராக முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டு, காவல்துறையின் அடக்கு முறைகளை தகர்த்து இன்றைக்கும் மக்கள் நலனுக்காகவே ஓய்வின்றி போராடி வருகிறார்”என்றார். குமரி மாவட்டத்தில் பிறந்தாலும் புதுச்சேரி மக்களின் என்னற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் முகமாக செயல்படும் முருகனின் போராட்ட வரலாறுகளை இளம் தலை முறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பாஜக இன்றைக்கு சோதனைக் கூடமாக புதுச்சேரியை மாற்றி வருகிறது. பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை மக்கள் எதிர்ப்பின், போராட்டத்தின் காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் மின் துறை தனி யார் மயமாக்கப்பட்டால், அது இந்தியாவிற்கே தவறான எடுத்துக் காட்டாக அமைந்துவிடும். எனவே அனைத்து பகுதி மக்க ளையும் பாதிக்கும் மின்துறை தனி யார்மயத்தை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டு கொண்டார். அரசியல் சாசனத்தை சிதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. அர சமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே வரும் நாடளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன்
தமுஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், கட்சியின் புதுச்சேரி போராட்ட வரலாறாக தா.முருகனின் வாழ்க்கை வரலாறு அமைந்து ள்ளது. சமூகத்தில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களின் என்னற்ற பிரச்சனைகளில் சமரச மின்றி முன்னின்று போராடி வெற்றி பெற்றவர். அதேபோல் கட்சி யின் புதுச்சேரியின் போராட்ட வர லாற்றையும் நாம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதில் தமுஎகச மாநிலப் பொரு ளாளர் சைதை ஜெ, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெரு மாள், பேராசிரியர் இளங்கோ, பாவலர் சண்முகசுந்தரம் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இறுதி யாக தா.முருகன், நூல் ஆசிரியர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பாரதி புத்தகா லயத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் செல்வம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செய லாளர் மணி.கலியமூர்த்தி, துணைத் தலைவர் பச்சையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.