சென்னை, ஆக. 5 - பத்திரிகையாளர் வே.பெரு மாள் எழுதிய ‘மிளகாய் குண்டுகள் - சங்கராயணம்’ நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஆக.5) மயிலாப் பூர் பகுதியில் நடைபெற்றது. இந்நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.நிவேதா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவதே ஒருவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என்றார் ஜோசப் ஸ்டாலின். அதிலும் முழு நேர ஊழியர்களுக்கு இந்நூலை ஆசிரியர் பெருமாள் சமர்ப்பித்துள் ளார். தோழர் சங்கரய்யா வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், வரலாற்றை, புனைவுகளோடு எழுதி யுள்ளார். இந்த நூல் கதம்பமாக அமைந்துள்ளது. வடிவத்தை விட உள்ளடக்கத்தை விட கூர்மையாக பார்க்க வேண்டும். தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளில் அவரை பெருமைப் படுத்த தமிழக அரசு, ‘தகைசால் தமிழர்’ விருதுடன் 10 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்தது. அதனை கொரோனா பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்து விட்டார். விருது வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற சிபிஎம் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “சங்க ரய்யாவிற்கு விருது கொடுத்து சிக்சர் அடித்ததாக நினைத்தேன். ஆனால், அந்த தொகையை நிவாரண நிதிக்கு கொடுத்து அவர் டபுள் சிக்சர் அடித்து விட்டார்” என்று புளுங்காகிதத்தோடு தெரி வித்தார். அரசியலில் கலைஞருடன் எதிரும், புதிருமாக இருந்ததுண்டு. இருப்பினும், தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று சிறையில் சங்கரய்யா தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த போராட்டத்தின் 10வது நாளில் சங்கரய்யா ‘தாய்’ நாவல் படித்துக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்த சிறை கண்காணிப்பாளர், முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதை மனதில் வைத்திருந்த கலைஞர், தாய் நாவலை கவிதையாக படைத்த போது, அதற்கு சங்கரய்யாவை முன்னுரை எழுத வைத்தார். இந்த அம்சத்தையும் நூலாசிரியர் நூலில் கொண்டு வந்துள்ளார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக படித்துக் கொண்டிருந்த நூல் ‘அரசும் புரட்சியும்’ என்பது தவறு. கிளாரா ஜெட்கின் தொகுத்த ‘லெனின் நினைவலைகள்’ என்ற நூலை படித்தார். 1931 பிப்ரவரி 2ம் தேதி தனது சகாக்களுக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங், “அன்றாட நடைமுறை பணிகள், புரட்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் லெனினின் வாழ்க்கை, அவரது படைப்புகளை படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். பகத்சிங் தூக்கிலிடப்படாமல் இருந்திருந் தால், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக பகத்சிங் விளங்கியிருப்பார். நாம் விரும்பும் மாற்றத்தை நம்மி டம் இருந்து தொடங்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியவர் சங்கரய்யா. கலைஞர் சமத்து வபுரத்தை தொடங்கினார். சங்கரய்யா, தனது குடும்பத்தையே சமத்துவ புரமாக மாற்றினார். கோவை கலவரம் நடந்தபோது சங்கரய்யா அறிக்கை விடுத்த சில நிமிடங்களில் தொடர்பு கொண்ட கலைஞர், மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு அந்தப் பிரச்சனையை அணு கும் என்றார்.
அத்தகைய தத்துவ, நடைமுறை தெளிவு கொண்டவர் சங்கரய்யா. அரசியல், தத்துவம், சாதி, தத்து வம் என பல்வேறு அம்சங்களில் நீண்ட அனுபவம் கொண்ட சங்க ரய்யா, தமது கருத்தை கட்சி கமிட்டி களில் மட்டுமே சொல்வார். ஒரு மகத்தான தலைவரின் வாழ்க் கையை கவிதையாக்குவது சிரமமானது. அதை சிறப்பாக நூலாசிரியர் செய்துள்ளார். இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதை, கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்து ஒன்றிய அரசு மக்களை வஞ்சிப் பதை எதிர்த்து கட்சி நடத்தும் போராட்டங்கள், இயக்கங்களை படைப்புகளாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கி யம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.குமார், பத்திரிகையாளர் மயிலை பாலு, தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் சி.எம்.குமார், சிபிஎம் கிளைச் செயலாளர் ஆர்.ரமேஷ், எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.