ஈரோடு, டிச.30- நலவாரிய உரிமைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐடியு உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மகாசபை வலியுறுத்தியுள்ளது. ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற்சங்கத்தின் மகா சபை ஞாயிறன்று மூலப்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, அச்சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். உதவி செயலாளர் கே.நர்மதா வர வேற்றார். சிஐடியு முன்னாள் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பி.மாரிமுத்து துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் சி.முருகேசன், பொருளாளர் எம். சதீஸ்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்த னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் சிறப்பு ரையாற்றினார். இக்கூட்டத்தில், அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி, திருமணம், விபத்து மற்றும் இயற்கை மர ணங்களுக்கான உதவித் தொகை மற்றும் ஓய்வூதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லா தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, புதிய கமிட்டியின் கௌரவத் தலைவராக கே.துரைராஜ், தலைவராக என்.பழனிசாமி, துணைத்தலைவர்களாக எம்.சேனாதிபதி, எல்.புஷ்ப ராஜ், பொதுச்செயலாளராக சி.முருகேசன், துணைச் செயலாளர்களாக கே.நர்மதா, வி.பிரபு, சீ.பூரண சந்தி ரன், பொருளாளராக எம்.சதீஷ்குமார் மற்றும் 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.