தருமபுரி, ஜன.22- பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்க ளும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இடது சாரிகளின் தேவை அதிகரித்துள்ளதென, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். தோழர் கே.எம்.ஹரிபட் நினைவுதின அஞ்சலி கூட்டம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, தருமபுரி மாவட்ட வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம், சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தல் புத னன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன் தலைமை வகித்தார். தோழர் கே.எம். ஹரிபட் உருவப்படத்துக்கு மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதைய டுத்து, கட்சியின் அகில இந்திய மாநாட்டின் தருமபுரி மாவட்ட வரவேற்புக்குழு தலைவ ராக பி.இளம்பரிதி, செயலாளராக இரா.சிசு பாலன், பொருளாளராக ஆர்.மல்லிகா உட் பட 100 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அப்போது, டி.ரவீந்திரன் பேசுகையில், தோழர் கே.எம்.ஹரிபட் ஓட்டல் தொழிலாளி யாக, தன் வேலையை தொடங்கி ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து சங்கம் அமைத்தார். ஒன்றுபட்ட தரு மபுரி மாவட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்கள் வசித்து வந்தனர். அனைத்து மொழியும் தெரி யும் என்பதால் கட்சி வேலைக்காக தோழர் ஹரிபட் தருமபுரிக்கு அனுப்பப்பட்டார். ஒசூ ரில் தொழிற்சாலை வளர்ந்துவரும் காலக்கட் டத்தில் அங்கு சென்று தொழிற்சங்கத்தை அமைத்தார். இந்த மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பலமாக்குவது, புரட்சிகரமான கட்சி யில் ஸ்தாபன வழிகாட்டியாக விளங்கினார். தோழர் ஹரிபட்-டின் தியாகத்தலும்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். மேலும், பாஜக ஆட்சியில் விவசா யிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராடி பெற்ற 8 மணி நேர வேலை நேரத்தை, தற் போது 12 மணி நேரம், 14 மணி நேரம் என வேலை வாங்கி கார்பரேட்கள் தொழிலா ளர்களை சுரண்டுகின்றனர். இதற்கு எதிராக போராடி வருகிறோம். இடதுசாரிகளின் தேவை அகிரித்துள்ளது. உழைக்கும் மக் களை ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மூத்த தலைவர் பி. இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், சோ. அருச்சுனன், வே.விசுவநாதன், ஆர்.மல் லிகா, தி.வ.தனுசன், ஜி.சக்திவேல், இடைக் கமிட்டிச் செயலாளர்கள் ஆ.ஜீவானந்தம், பி.குமார், ஆர்.சக்திவேல், ஆர்.ஜோதிபாசு, எஸ்.எஸ்.சின்னராசு, கார்ல் மார்க்ஸ், கே. தங்கராஜ், எம்.தங்கராஜ், கே.கோவிந்தசாமி, ஆர்.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் நன்றி கூறினார்.