திருப்பூர், டிச. 30 – திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் வடுகபாளையத்தில் கைத்தறி நெசவாளர் குடும்பத்தார் 200 பேருக்கு நில உரிமைப் பத்திரம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் வட்டாட்சி யரிடம் ஒப்படைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுபாளையத்தில் பூமி தான இயக்கத்தில் ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு பட்டா கொடுத்த நபர்களுக்கு நில விநியோக உரிமை பத்திரம் வழங்குவதாக நிலச்சீர்திருத்த ஆணையர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்ப டையில் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் திங்களன்று 200 உறுப்பினர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் பட்டா நகல் ஆகியவை, பல்லடம் வட்டாட்சியரை நேரில் சந் தித்து ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் (சிஐடியு) சங்கச் செயலாளர் என்.கனக ராஜ், மாவட்டப் பொருளாளர் கோபால், துணைத்தலைவர் வைஸ் என்ற சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.