உடுமலை, ஜன.22- உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் மலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட இடமாக வகை மாற்றம் செய்து, வனத்துறை கட்டுப் பாட்டில் எடுத்து காப்புக்காடாக மாற்றப்ப டும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள் ளனர். உடுமலை வட்டம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் சுமார் 2920 ஏக்கர் பரப்பளவு மலை பகுதியில், விவசாயிகள் பயன்ப டுத்தும் வகையில் சமதள நிலத்தை 1970 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் 300 குடும்பத் திற்கு 0.50 சென்ட் முதல் 2.20 ஏக்கர் வரை விவ சாய பயன்பாட்டிற்கு நிபந்தனை பட்டா வழங் கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகள் மழை இல்லாமல் போனதால், ஜம்புக்கல் மலை பகுதியில் இருந்து விவசாயிகள் வெளியேறியதை பயன்படுத்தி, தனி நபர்கள் சிலர் தங்கள் பெய ரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் ஆவ ணம் தயாரித்து மலைப்பகுதி முழுவதை யும் ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி விவசா யிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தி னர் தமிழக முதல்வர், வருவாய் துறை, வனத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்ததுடன், பலகட்டப் போராட்டங்களும் நடத்தினர். எனி னும் தற்போது வரை மலைப்பகுதியில் இருக் கும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வருவாய்த்துறையின் கட் டுப்பாட்டில் இருக்கும் மலைப்பகுதியை வனத்துறை வகை மாற்றம் செய்து ஜம் புக்கல் மலைத்தொடர் முழுமைக்கும் பாது காக்கப்பட்ட காப்புக்காடுகளாக மாற்றம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு ஜம்புக்கல் மலைப்பகுதியில் வனத்துறை சார்பில் சமு தாய பசுமைக்காடுகள் பகுதி 1 (தென் மேற்கு) என்ற திட்டத்தின் கீழ் சுமார் 50- 0 ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் நடப்பட்டது குறிப்பி டத்தக்கது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகை யில், கடந்த நான்கு ஆண்டுகளாக வருவாய்த் துறைக்கு சொந்தமான ஜம்புக்கல் மலைப் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து பழ மையான மரங்களையும் கனிம வளங்களை யும் கொள்ளை அடித்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாய சங் கத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் வனத்துறை நடத்திய விவசாயி களின் குறை தீர்ப்பு கூட்டத்தில் மீண்டும் ஜம் புக்கல் மலை ஆக்கிரமிப்பு முழுவதும் காப்பு காடுகளாக மாற்றப்படும் என்று கூறியுள் ளனர்.