திருப்பூர், ஜன.21 - திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித் துள்ளனர். சீர்மிகு நகரத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாடகை நிறுத்தத்தை பயன்படுத்து வதற்கு நிர்பந்திக்கும் விதத்தில், அப ராதம் விதிக்கப்படுகிறதா என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி னர். திருப்பூர் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பேருந்து நிலையத்திலி ருந்து ஈரோடு, சேலம், திருவண்ணா மலை மற்றும் பழனி உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிக ளுக்கும் நூற்றுக்கணக்கான பேருந் துகள் தினசரி இயக்கப்பட்டு வரு கின்றன. பள்ளி, கல்லூரிக்குச் செல் லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர் கள் என தினந்தோறும் பல்லாயிரக்க ணக்கானோர் பேருந்து நிலையத் திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலை யத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பேருந்து நிலை யத்திற்குள் இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடாது, பேருந்து நிலையத் திற்குள் மற்றும் பேருந்து நிலையத் தின் முன் பகுதியில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனை கவனத் தில் கொள்ளாமல் பேருந்து நிலை யம் முன் பகுதியில் நிறுத்தப்பட்டி ருந்த 2 மற்றும் 4 சக்கர வாகனங்க ளுக்கு வெவ்வாயற்று போக்குவ ரத்து காவலர்கள் அபராதம் விதித்த னர். உரிமையாளர்கள் இல்லாமல் இருந்த வாகனங்களின் மீது அறி விப்பு நோட்டீஸ் ஒட்டியது மட்டுமல் லாது, 2 மற்றும் 4 சக்கர வாகனங்க ளில் சக்கரங்களுக்கு பூட்டு போட்டுச் சென்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், பேருந்து நிலை யத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களை இறக்கி விடுவ தற்காக பேருந்து நிலையத்திற்கு வருகை தருபவர்கள் வாகனங்களை உள்ளே எடுத்து செல்லக் கூடாது, வெளியிலும் நிறுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி நிறுத்து பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு கிறது. இப்பகுதியில் வேறு எங்கு வாகனங்களை நிறுத்தலாம் என காவ லர்களே அறிவிக்க வேண்டும். அதைச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக வாகனம் நிறுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளனர். 10 முதல் 30 நிமிடத்திற்காக கட்டணம் செலுத்தி வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் எதிர்பார்கின்றனர். எதற்கெடுத்தாலும் பணம் செலுத்த வேண்டும் என கூறுவது ஏற்புடைய தல்ல. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த னர்.