districts

எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை: நிதியமைச்சரை சந்திக்க ஏற்றுமதியாளர்கள் முடிவு

திருப்பூர், பிப்.1- தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்  திட்டம் மற்றும் வட்டி சமன்படுத்தும்  திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறி விப்பு வரும் என எதிர்பார்த்திருந் தோம். அது வரவில்லை. எனவே இது  குறித்து நிதி அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலு வலகத்தில் சனியன்று திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் பத்திரிகையாளர்க ளிடம் கூறியதாவது:  பிணையில்லா கடன் ரூ.10  கோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்க ளுக்கு ரூ.20 கோடி கடன் வழங்க  அறிவிப்பு, பெண் தொழில் முனை வோருக்கு கடன் ரூ.2 கோடியாக அதி கப்படுத்தி அறிவிப்பு, எம்.எஸ்.எம்.இ  வரையறையில் குறைந்தபட்சம் விற் றுவரவு (டர்ன்ஓவர்) ரூ.250 கோடியில்  இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி உள்ளது போன்ற அம்சங்கள் உள் ளன.  பருத்தி உற்பத்திக்கு ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக மகசூல் தரக்கூடிய பருத்தி  விலை குறைவாக கிடைக்கும். இந் திய அளவில்  ஐந்து திறன் மேம்பாட்டு  பயிற்சி மையம் அறிவித்துள்ளதில் ஒன்று திருப்பூருக்கு கிடைக்க வாய்ப் புள்ளது. அது வந்தால் மிக சாதக மாக இருக்கும். எதிர்பார்த்தது இல்லை எக்ஸ்போர்ட் புரமோஷன் திட்டம்  அறிவிக்கப்பட்டிருப்பதை வர வேற்கிறோம். ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தவும் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம்  ஏ-டப் திட்டம் மற்றும் ஏற்றுமதியா ளர்களுக்கு குறைந்த வட்டி விகி தத்தில் ஏற்றுமதிக்கு முந்தைய மற் றும் பிந்தைய ரூபாய் ஏற்றுமதி கடன் களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வட்டி சமன்படுத்தும் திட்டம்  மற்றும் சென்ற நிதியாண்டில் வேலை  வாய்ப்புடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் குறித்து அறி வித்திருந்தனர். அது குறித்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தி ருந்தோம் அது வரவில்லை. இது தொடர்பாக நிதி அமைச்சரை நேரில்  சந்தித்து வலியுறுத்துவோம் என் றார். டீமா தலைவர் முத்துரத்தினம் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும்  உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத் தரத்தினம் பட்ஜெட் குறித்து கூறுகை யில், பருத்தி இறக்குமதி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷில் இருந்து இறக்கும தியாகும் ஆடைகளுக்கு வரி விதிக்க  வேண்டும் என வலியுறுத்தி இருந் தோம். அது குறித்து அறிவிப்பு வெளி யிடப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார். வங்கதேசம் இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு மூலப் பொருள்கள் வாங்கி, அவற்றை துணி யாக உற்பத்தி செய்து மீண்டும் இந்தி யவிற்கு ஏற்றுமதி செய்வதால், இந் திய உள்நாட்டு பின்னலாடை உற் பத்தி மற்றும் விற்பனை கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜவுளித் தொழில் துறையினருக்கு மிகுந்த சிக்கல்களை உருவாக்கி வருகிறது. எனவே வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடை மற்றும் துணிகளுக்கு வரி விதிக்க வேண்டும் என ஜவுளித் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தனர். இந்த கோரிக்கை குறித்து பட்ஜெடில் அறி விக்கப்படாதது தொழில் துறையி னருக்கு ஏமாற்றமே!