districts

img

மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீரால் அழுகிய பயிர்கள்!

தருமபுரி, ஜன.11- ஒன்றரை மாதத்திற்கு மேலாக சுமார் 50 ஏக்கர் அளவிலான விவ சாய நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால், பயிர்கள் அழுகியுள்ள தால் விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிரா மத்தில் உள்ள கடமன் ஏரியில், நீர்  நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த டிசம் பர் மாதத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மழை  பொழிந்ததால் இந்த ஏரி நிரம்பியது. ஏரியில் கூடுதலாக தண்ணீர் தேங்கி  நிற்பதற்கு இரண்டு அடி உயரம் அளவில் சிமெண்ட் காங்கிரீட் மூலம் உயர்த்தப்பட்டன. இதனால் தண்ணீர் கூடுதலாக தேங்கி நிற் கின்றன. இருந்த போதிலும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயி கள் சுமார் 50 ஏக்கர் அளவில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள், பாக்கு  போன்ற விவசாய நிலத்தில் பயிரி டப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் ஊறி அழுகும் நிலை ஏற்பட்டுள் ளன. இதனால் கவலையடைந்த விவசாயிகள் ஏரியிலிருந்து தண் ணீர் வெளியேறும் பகுதியில் உயர்த்தப்பட்ட அளவை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு  அளித்தும் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, ஒன்றரை மாதத் திற்கு மேலாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஏற்க னவே அழுகி இருக்கும் பயிர்களை  அப்புறப்படுத்த முடியாமலும், வேறு பயிர்களை நடவு செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, விவசாயி களின் நலன் கருதி பல ஏக்கர் அள வில் விளை நிலங்களில் தேங்கி யுள்ள தண்ணீரை வெளியேற்றுவ தற்கு அதிகாரிகள் நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும், என விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.