தருமபுரி, டிச.30- பென்னாகரம் அருகே காவல் அதிகாரி எனக்கூறி பழங்குடியின பெண், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மலைவாழ் மக்கள் சங்கம் தலை மையில் காவல் நிலையத்தில் புகா ரளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சி அருகே உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த தம்பதி, 2 நாட்களுக்கு முன்பு எரிமலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை, 2 பேர் சிஐடி காவலர்கள் எனக்கூறி எழுப் பியுள்ளனர். அப்போது, அதில் ஒரு வர் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். மற்றொரு வர் பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கூச்சலிட வீட் டில் தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி எழுந்திருக்க, அவரை யும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இச்சம்ப வத்தைக் கண்ட கணவன் கூச்சலிட, அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச்சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்கிடையே, அப்பெண் கூச்சலிட்டு அருகிலி ருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வருவ தைக் கண்ட காவல் அதிகாரி எனக் கூறிய 2 பேர் தப்பியோடி முயன்றுள் ளனர். அப்போது, விவசாய நிலத் தில் காவலுக்கு இருந்த நபரை யும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் தப்பி யோடிய 2 பேரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் தங் களை சிஐடி காவலர்கள் என்றுக் கூறி மலைக்கிராமத்துக்கு வந்த வர்கள் கலால் போலீசாரோடு சோதனை என்ற பெயரில் ஏற்க னவே இந்த மலைக் கிராமத்துக்கு வந்து சென்றவர்கள் என்பதும், பாலக்கோடு ரயில் நிலையம் பகுதி யைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (50) மற்றும் சக்தி ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திங்களன்று மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசு வநாதன், பகுதிச் செயலாளர் ஆர். சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.சின்னசாமி ஆகியோர் தலைமையில், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்த னர். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், கூடுதல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பாலசுப்பிரமணி, பென்னாகரம் உதவி காவல் கண் காணிப்பாளர் மகாலட்சுமி, கலால் உதவி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
உடந்தையாக உள்ள காவல் துறையினர்!
மலைவாழ் மக்கள் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னா கரம் அருகே இருளர் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் லத்தி யுடன் நுழைந்த இரண்டு பேர் தங்களை சிஐடி போலீஸ் என்று கூறிக்கொண்டு மலைவாழ் மக்களை அச்சுறுத்தியுள்ளனர். கஞ்சா வைத்திருப்பதாக கூறி அப்பாவி இருளர் இன மக்களை தாக்கியும், கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவரது மனைவியையும், சிறுமியையும் பாலி யல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். போதை தடுப்புப் பிரிவு போலீசாருடன் சோதனை என்ற பெயரில், ஏற்கனவே அந்த கிராமத்துக்கு சில முறை வந்த போலீஸ் இன்பார்மர்கள் என்று கூறப்படும் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் சக்தி என்ற இருவர், தங்கள் கையில் போலீசார் பயன்படுத்தும் லத்தியை எடுத்துக் கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கிராமத்தில் வசிக்கும் அப்பாவி இருளர் பழங்குடி மக் களை மிரட்டி பொய் வழக்கு போடுவதாக பணம் பறிக்கும் நோக் கத்துடன் செயல்பட்ட அந்த இரண்டு பேர் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். அவர்களோடு தொடர்பில் இருக்கும் காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் முன்வர வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.