districts

img

நான்கு சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை எதிர்த்து திருப்பூரில் சிஐடியு போராட்டம்

திருப்பூர், நவ.22 – தொழிலாளி வர்க்கத்தின் கடும் எதிர்ப்பை யும் மீறி நான்கு சட்டத் தொகுப்புகளை அறி விக்கை வெளியிட்டுள்ள ஒன்றிய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் சிஐ டியு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் விடுதலைப் போராட்ட காலத்திலும்,  நாடு விடுதலை பெற்ற பிறகும் உருவாக்கப் பட்ட தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக் கட் டும் விதத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு  தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய  அரசு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை மீறி  நிறைவேற்றியது. எனினும் நாடு தழுவிய அள வில் தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலை யில், அந்த சட்டத் தொகுப்புகளை அறி விக்கை செய்யாமல் இருந்தது. இந்நிலை யில் திடீரென நவ.21 ஆம் தேதி வெள்ளி யன்று இந்த நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் விதத்தில் அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது.  இதற்கு நாடு முழுவதும் தொழிற்சங்கங் கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன்  ஒரு பகுதியாக திருப்பூரில் தியாகி குமரன்  நினைவகம் முன்பாக , சனியன்று சிஐடியு  ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிஐடியு திருப்பூர்  மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழி லாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடி யாக கைவிட வேண்டும். இந்திய தொழிலா ளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.  சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், துணைத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், கட்டுமான சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில்  திரளானோர் பங்கேற்றனர்.