tamilnadu

img

போராடும் மக்களுக்கு எதிராக மத்தியப் படையை அழைப்போம் என்பதா?

போராடும் மக்களுக்கு எதிராக  மத்தியப் படையை அழைப்போம் என்பதா? நீதித்துறை அத்துமீறலுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

சென்னை, நவ.22- போராடும் மக்களுக்கு எதிராக மத்தியப் படையை வரவழைப்போம் என்று  நீதிபதிகள் கூறியிருப்ப தற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவு ஒன்றை பெ. சண்  முகம் வெளியிட்டுள்ளார். அதில், “கரூர் மாவட்டம் வெண்ணை மலை கிராமத்தில் தங்களின் குடியிருப்பை யும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கடந்த  10 நாட்களுக்கு மேலாக மக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சென்னை  உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி கள் நிதானம் இழந்து கருத்துக்களை வெளிப்  படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள ஒரு ஆட்சி இருக்கும் போது  மக்களை அப்புறப்படுத்த மத்தியப் படையை  நாங்கள் அழைப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் அதி கார வரம்பை மீறிய செயல் மற்றும் கண்ட னத்திற்குரியது” என்று பெ.சண்முகம் குறிப்  பிட்டுள்ளார்.