கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்!
சென்னை, நவ. 22- கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக் கான திட்டங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது ஏமாற்றமும் வருத்த மும் அளிப்பதாகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்ச கத்தின் இந்த முடிவை, மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றை யும் பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக் காக அனுப்பியிருந்தோம். இது குறித்து, கடந்த மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரதமரையும் சந்தித்து தமிழ்நாட்டின் முன்னு ரிமை கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை சமர்ப்பித்து, இத் திட்டங்கள் குறித்து தனிப்பட்ட முறை யிலும் எடுத்துரைத்தேன். எனினும், மற்ற மாநிலங்க ளுக்கு இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலை யில், எங்களது கோரிக்கையை நிரா கரித்தது பெருத்த அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற் கோள் காட்டப்பட்டுள்ள காரணங் கள் பொருத்தமற்றவை. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன்படி, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயம்புத் தூர் உள்ளூர் திட்டப் பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தைத் தாண்டியிருந்தது. மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள்தொகை யை விட அதிகமாக இருக்கும். இந்த 20 லட்சம் என்ற அளவுகோல் ஒரே மாதிரியாகக் கருத்தில் கொள்ளப் பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப் பில்லை. ஆனால் மதுரை மற்றும் கோவையில் இந்த அளவுகோலை காரணம் காட்டுவது எங்கள் நகரங்க ளுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாகுபாட்டையே காட்டுகிறது. இருப்பினும், ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க, எமது குழுவுடன் தில்லிக்கு வந்து பிரதமரை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்”. இவ்வாறு கடிதத்தில் முதல மைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
