districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உணவுப் பொருட்கள் மீது உறங்கும் பூனைகள்: பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை

உணவுப் பொருட்கள் மீது உறங்கும் பூனைகள்: பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை நாமக்கல், ஜன.11- குமாரபாளையம் அருகே, பேக்கரியில் தயாரிக்கப் பட்ட உணவுப் பொருட்கள் மீது பூனைகள் உறங்குவ தும், சுகாதாரமற்றும் இருந்ததையடுத்து, உணவு பாது காப்புத்துறையினர் பேக்கரிக்கு சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - சேலம் சாலையில் உள்ள பிரபல பேக்கரியில் (சென்னை ஹாட்  பப்ஸ்) சுகாதாரமற்ற முறையில் கேக் மற்றும் ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வெள்ளியன்று திடீர்  ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, ரொட்டி மற்றும் கேக் தயாரிப்பு இடத்தில் உள்ள பொருட்கள் சுகாதாரமற் றும், தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது பூனைகள் தூங்கு வதும் தெரிய வந்தது. இதனையடுத்து உணவு பொருட் கள் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில், சுகாதாரமற்ற உணவு பண்டங்கள் தயாரிப் பது தெரிய வந்தது. இதனடிப்படையில் உணவு பாது காப்பு ஆணையர் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் அருண் வழிகாட்டுதலின்படி, உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் பேக்கரி கடை  கதவுகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறியல் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறியல் அறிவிப்பு ஈரோடு, ஜன.11- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்துள் ளனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் பவானியில் தலைவர் டி.சாவித் திரி தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்டச் செயலாளர் (பொ)  ப.மாரிமுத்து மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து, நம்புராஜன் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகை (ரூ.6000, 10,000, 15,000  என) ஆந்திர மாநில அரசு வழங்குவது போல் தமிழ்நாடு அரசும் வழங்கிட வேண்டும். அனைத்து மாற்றுத்திற னாளிகளின் குடும்ப அட்டையை அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) அட்டையாக மாற்றி மாதம் 35 கிலோ  அரிசி வழங்க வேண்டும். கிராமப்புற 100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வேலை செய்த நாட்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை குறைக்காமல் வழங்கிட வேண்டும், 4 மணி நேர வேலை மட்டுமே என்பதை  உத்தரவாதபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கொடுமுடி, மொடக்குறிச்சி, சத்திய மங்லம், அந்தியூர், பவானி வட்டாட்சியர் அலுவல கங்கள் முன்பும், பவானிசாகர், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பும் வரும்  21ஆம் தேதி மறியல் செய்வது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

வனச்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி விழிப்புணர்வு

மேட்டுப்பாளைம், ஜன.11- மேட்டுப்பாளையம் – உதகை மலை  சாலையில் சுற்றுலாப் பயணிகள் வீசி யெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை வனத் துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் அகற்றினர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து அடர்ந்த வனப் பகுதி வழியே பிரிந்து செல்லும் உதகை  மற்றும் கோத்தகிரி என இரு மலைச் சாலைகள் உள்ளது. இந்தவழியாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வரும் சுற்றுலாப் பயணிகள் குளிர்ச்சி யான மலை வாசஸ்தலங்களுக்கு சென்று திரும்புகின்றனர். தினசரி ஆயிரக்கணக் கானோர் இந்த சாலையை பயன்படுத்து கின்றனர். இந்நிலையில், இந்த வனச் சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணி களில் சிலர் காட்டுப்பகுதியில் வீசி யெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாக பாதிக் கப்படுகிறது. பயணத்தின் போது தாங்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் கவர் களில் அடைக்கப்பட்ட மீதமான திண் பண்டங்கள், காலியான பிளாஸ்டிக் தண் ணீர் பாட்டில்கள், கண்ணாடி, மது பாட் டில்கள் போன்றவற்றை வனம் சார்ந்த  பகுதிகளில் வீசியெறிந்து செல்கின்ற னர். இதனை இப்பகுதியில் சுற்றித்திரி யும் குரங்குகள், மான்கள், காட்டெரு மைகள், யானைகள் போன்ற விலங்கி னங்கள், சிப்ஸ் போன்ற திண்பண்டங்க ளின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடு கின்றன. இதனால் இயற்கையான வனச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு காட்டுயிர்களும் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வனத் துறை உயர் அதிகாரிகள், மேட்டுப் பாளையம் - உதகை சாலையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடிவெ டுத்தனர். இதனையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வன  ஆர்வலர்கள் இணைந்து கழிவுகளை  அப்புறப்படுத்தினர். முன்னதாக வனத் துறையின் தலைமை வனப்பாதுகாவ லர் மற்றும் ஆணைமலை புலிகள் காப் பக கள இயக்குனர் வெங்கடேஷ்,  மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்,  வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின்  ஆகியோர் பங்கேற்று, வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் போன்ற கழிவு களால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை மரக் கிடங்கு வளாகத்தில் விழிப்புணர்வு கூட் டம் நடத்தி மாணவ, மாணவிகள் மத்தி யில் உரையாற்றினர். நீலகிரி மலையின் அடிவாரமான கல்லாறு முதல் பர்லியார் வரையிலான மலைச்சாலையில் பிளாஸ் டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்காட்டில் நிலவும் கடுங்குளிர்: பொதுமக்கள் அவதி

சேலம், ஜன.11- ஏற்காட்டில் நிலவும் கடுங்குளிரால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், சுற்றுலாப் பய ணிகளின் வருகையும் குறைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகள வில் பெய்தது. இதன் காரணமாக தற் போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதைத்தொடர்ந்து மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே  சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக் கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக, சுற்றுலாத் தலமான ஏற்காட் டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. தினமும் மாலை 3  மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறு நாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடு களிலேயே முடங்கி உள்ளனர். இத னால் சாலைகள் வெறிச்சோடி காணப் படுகிறது. தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச் சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகி றார்கள். இதனால் அரசு மருத்துவமனை களில் புறநோயாளிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. குறிப்பாக வயதா னவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். பள்ளி,  கல்லூரி செல்லும் மாணவ, மாணவி கள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது. காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும், மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல் கின்றன. இதேபோல், சேலம் மாவட் டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிக ளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இலவச வேட்டி, சேலை கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்

ரேசன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம்

திருப்பூர், ஜன.11- திருப்பூர் மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலைகள் குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்டி, சேலை கிடைக் காததால் பொதுமக்கள் பலர் ரேசன் கடைகளில் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகைக்கு பொங் கல் பரிசுத் தொகுப்புடன், இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தி ருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன.13 ஆம் தேதி வரை தரப்படும் என்று அறிவித்த அரசு, இலவச வேட்டி, சேலைகளை ஜன.31 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தெரி வித்திருந்தது. இந்நிலையில், திருப் பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங் கியது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகி றது. அதேசமயம் பல கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங் கும் திட்டத்தில் கார்டுதாரர்க ளுக்கு வேட்டி, சேலைகள் வழங்க வில்லை. உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, திருப்பூர் நக ரம் உட்பட அனைத்து நகரம், கிரா மப்புறங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிக ளுக்கு ஒரேயொரு இலவச வேட்டி  மட்டுமே வழங்கியுள்ளனர். சேலை  வழங்கவில்லை. இதனால் கடை விற்பனையாளர்களிடம் பெண்கள்  வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையில் கேட்டபோது,  முதற்கட்டமாக கடைகளுக்கு 30 முதல் 35 சதவிகிதம் வேட்டி, சேலை கள் மட்டுமே அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஜன.31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் அடுத்த டுத்து அனைத்து பயனாளிகளுக் கும் வேட்டி, சேலை கொடுக்கப் படும், என்றனர். அதேசமயம் பய னாளிகளுக்கு ஒரேயொரு வேட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது, சேலை தரப்படவில்லை என்று  புகார் வருவது பற்றி கேட்டபோது,  உணவு வழங்கல் துறை வட்டாட் சியர் ஒருவர் பதிலளிக்கையில், தனி கார்டுதாரர்களாக இருந்தால் அவர் ஆணாக இருந்தால் வேட்டி மட் டும் அல்லது பெண்ணாக இருந் தால் சேவை மட்டும் தான் வழங்கப் படும் என்று கூறினார். ஆனால் தனி நபர்கள் இல்லாமல் பல உறுப்பி னர்கள் இருக்கக்கூடிய கார்டுதாரர் களுக்கும் ஒரேயொரு வேட்டி மட் டும் கொடுக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறினர். கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை திட்டத் தில் அனைவருக்கும் உரிய வேட்டி,  சேலைகள் உற்பத்தி நடைபெறு கிறது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உற்பத்தியை முடித்து அனைத்து கடைகளுக்கும் பகிர்ந்தளித்து, மக் களுக்கு வேட்டி, சேலை விநி யோகிக்கப்படும் என்று அமைச் சர்கள் கூறியிருந்தனர். ஆனால், நியாயவிலைக் கடை ஊழியர்கள் கூறுகையில், 100 பேருக்குத் தர வேண்டிய இடத்தில் 30, 35 வேட்டி, சேலைகள் மட்டுமே கடைகளுக் குத் தரப்பட்டுள்ளது. ஆனால் பில் இயந்திரத்தில் 100 வேட்டி, சேலை கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக பதிவேற்றியுள்ளனர். இருக் கும் குறைந்தளவு வேட்டி, சேலை களை பயனாளிகளுக்கு வரிசைப் படி கொடுக்கும்போது கிடைக்கா தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடு கின்றனர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் கி. கனகராஜ் கூறுகையில், இப்போது மட்டுமல்ல, கடந்தாண்டும் பொங் கல் பண்டிகை சமயத்தில் முழுமை யாக இலவச வேட்டி, சேலை கொடுக்கவில்லை. ஒரு பகுதி மட் டுமே வழங்கினர். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியபோது, வேறொரு பகுதியிலிருந்து ஏற்பாடு  செய்து வேட்டி, சேலைகள் வழங்கி னர். இந்தாண்டும் அரை குறையாக திட்டத்தை நிறைவேற்றிவிட்டு முழுமையாகக் கொடுத்ததாக கணக்குக் காட்டப் போகிறார்கள், என்றார். ஜன.31 ஆம் தேதி வரை அனைத்து கார்டுதாரர்களுக்கும் உரிய இலவச வேட்டி, சேலை கொடுக்கப்படும் என்று கூறினா லும், அதை முழுமையாக கண்கா ணித்து, அனைத்து பயனாளிகளுக் கும் போய்ச் சேருவதை உறுதிப் படுத்த எந்த ஏற்பாடும் இல்லை. தற்போது ஒரு வேட்டி அல்லது சேலை மட்டும் பெற்றுக் கொண்டு செல்பவர்கள் எஞ்சிய மற்றொரு வேட்டி அல்லது சேலையைப் பெற மீண்டும் ரேசன் கடைக்கு வரும் வாய்ப்புக் குறைவு. இது  போன்ற சமயங்களில் முறைகே டாக வேட்டி, சேலைகளை விற்கக் கூடிய நிலை ஏற்படும். எனவே பய னாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கும் போதே வேட்டி, சேலை இரண்டையும் சேர்த்தே கொடுக்க வேண்டும் என் றும் பயனாளிகள் கூறினர். வேட்டி, சேலை தரும் திட்டத் தில் திருப்பூர் மாவட்டத்தில் பரவ லாக மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டி ருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து பயனாளிகளுக்கும் வேட்டி, சேலை கிடைப்பதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என்று  நியாய விலைக் கடை ஊழியர்கள் கூறினர்.

கறிக்கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு

கறிக்கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு கோவை, ஜன.11- சூலூர் தாலுகா, சுல்தான்பேட்டையில் கறிக்கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வட் டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், மலை பாளையம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கறிக்கோழி  பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, வியா ழனன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சூலூர் வட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் வெங்கடேஷ் என்ப வர் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகை யில் கறிக்கோழி பண்ணையை அமைத்து உள்ளார். இது குறித்து பலமுறை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அரசு அனு மதித்த அளவை தாண்டி பணிகள் நடைபெறுவதாக தெரி வித்தனர்.  விவசாயிகளின் போராட்டத்தையடுத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், கறிக்கோழி பண்ணை கட்டுமானத்தை நிறுத்தினால் மட்டுமே  கலைந்து செல்வதாக தெரிவித்து கலைந்து செல்ல மறுத்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித் ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பயோமெட்ரிக் முறையால் முதியவர்கள் பொங்கல் தொகுப்பு வாங்குவதில் சிக்கல்

பயோமெட்ரிக் முறையால் முதியவர்கள் பொங்கல் தொகுப்பு வாங்குவதில் சிக்கல்  அவிநாசி, ஜன.11- அவிநாசி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வயதான முதி யோர் பயோமெட்ரிக்  கருவியில் ரேகை பதிவேற்றும்  செய்ய முடியாததால், பொங்கல் தொகுப்பு வாங்குவதில் சிர மம் ஏற்பட்டுள்ளது.  அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகள் உள்ளன.  மேலும், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொது விநியோக  கடைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு வேட்டி  சேலை, அரிசி, சர்க்கரை, கரும்பு ஆண்டுதோறும் வழங்கு வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழக அரசு  பொங்கல் தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் நியாய  விலை கடைகளில்  முதியோர் உள்ள குடும்ப அட்டைதாரர்கள்   பொங்கல் தொகுப்பு வாங்க  சென்றால், கைரேகை பதிவ தில்லை. இதனால் பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் ஏமாற் றம் அடைந்து வருகின்றனர். வயதான முதியவர்களுக்கு பயோ மெட்ரிக்கில் ரேகை பதிவு ஏற்றுக்கொள்வதில்லை  என்றால்  அவர்களுடைய அட்டை, கையொப்பம் அல்லது ரேகை வைத்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  கோரிக்கை எழுந்துள்ளது.

காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு கேரளா போல் அனுமதி வழங்க கோரிக்கை

காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு கேரளா போல் அனுமதி வழங்க கோரிக்கை திருப்பூர், ஜன.11 – தமிழ்நாடு அரசு காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு  கொடுத்துள்ள அனுமதி நடைமுறைப்படுத்த இயலாதது. இது  விவசாயிகளுக்கு உதவாது. கேரளாவை போல் ஊராட்சி மன் றங்களே சுட்டுக் கொல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங் கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 9 மாவட்டங்களில் காட்டுப்பன் றிகளை சுட்டுக் கொல்வதற்கு அரசு அனுமதி அளித்தது. அந்த  ஒன்பது மாவட்டங்களிலும் அது சாத்தியமானதாக இல்லை,  இதனால் மீண்டும் காட்டுப்பன்றிகள் பல மடங்கு பெருகி தற் போது தமிழ்நாட்டின் வனப்பகுதிகள் இல்லாத மாவட்டங்க ளிலும், அனைத்து கிராமங்களிலும் காட்டுப்பன்றிகள் மயி லைப் போல பெருகி மிகப்பெரிய சீரழிவு ஏற்படுத்திக்  கொண்டிருக்கின்றன. தனியாக அகப்படும் விவசாயிகளை யும் பொது மக்களையும் அடித்து கொல்லும் அளவிற்கு  காட்டுப்பன்றி முரட்டுத்தனமாக வளர்ந்து கொண்டிருக் கின்றன. கடந்த கால அறிவிப்பை எவ்விதத்திலும் கருத்தில் கொள் ளாமல் மீண்டும் அதே போன்ற ஒரு அறிவிப்பை தமிழ்நாடு  அரசு வெளியிட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் ஊராட்சி மன்றங்க ளுக்கு அனுமதி கொடுத்து, ஊராட்சி மன்றங்கள் மூலமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதே பொருத்தமானதாக இருக்கும், தற்போதைய இந்த காட்டுப் பன்றியை சுட்டுக்  கொல்லும் அரசாணை விளம்பரத்திற்கு மட்டுமே ஆனதா கும். இதனால் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த இய லாது. காட்டுப்பன்றிகளால் பாதிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீ டுகள் சந்தை மதிப்பில் வழங்குவதற்கு பதிலாக மிக மிகக்  குறைந்த அளவு வழங்கப்படும் என பேரிடர் நிவாரண நிதியில்  குறிப்பிட்டு இருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செய லாகும். எனவே தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக, விவசாயி களுக்கு உண்மையாக உதவ வேண்டுமெனில், கேரளாவை  போல் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு ஊராட்சி மன் றங்களுக்கு அனுமதி அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று  விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி  சனியன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக் கிறார்.

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை பெருந்துறை        நகராட்சியுடன் இணைக்க சிபிஎம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜன. 11- கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை பெருந்துறை நக ராட்சியுடன் இணைக்க மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன் ஆட்சிய ருக்கு சனியன்று அனுப்பிய கடிதத் தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு  அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற் றும் பேரூராட்சிகளின் எல்லைகள்  விரிவாக்கம் குறித்து அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அரசாணை எண்.203 இன் படி பெருந்துறை சிறப்பு நிலை பேரூ ராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கருத்தறியப் படவில்லை. எனினும், பெருந் துறை சிறப்புநிலை பேரூராட்சி நக ராட்சியாக தரம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியையும் அதனுடன் இணைக்க வேண்டும். அப்போது தான் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகா தாரம் மற்றும் மருத்துவ வசதிகளும்  அவர்களுக்குக் கிடைக்கும். இக்கோரிக்கையை வலியு றுத்தி பெருந்துறை மற்றும் கரு மாண்டிசெல்லிபாளையம் பேரூ ராட்சிகளை இணைத்து பெருந் துறை நகராட்சியாக தரம் உயர்த் திட வேண்டும் என்று 16.08.2021  இல் நடைபெற்ற பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத்  தீர்மானம் எண்.107/2021 இன் மூல மும், கருமாண்டிசெல்லிபாளை யம் பேரூராட்சி மன்ற தீர்மானம் எண்.161/2021 இன் மூலமும் ஏக மனதாக தீர்மானங்கள் நிறை வேற்றி அரசிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அரசாணை எண். 203 இல் கருமாண்டிசெல்லிபாளை யம் பேரூராட்சியை பெருந்துறை நகராட்சியுடன் இணைப்பது குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இது இரு பேரூராட்சிகளில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராகவும், பொது மக்களுக்கும் பெரும் பாதிப்புகளை உருவாக்கும்.  பெருந்துறை நகரம் என்பது பெருந்துறை, கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சிகள் இணைந்த பகுதியாகும். ஈரோடு -  குன்னத்தூர் சாலையின் தெற்கு பகு திகள் பெருந்துறை பேரூராட்சியாக வும், ஈரோடு - குன்னத்தூர் சாலை யின் வடக்கு பகுதிகள் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியாக வும் அமைந்துள்ளது. பெருந்துறை  நகரின் ஒட்டுமொத்த பகுதியில்  சாலையின் தெற்கு பகுதிகள் நக ராட்சியாகவும், சாலையின் வடக்கு  பகுதிகள் பேரூராட்சியாகவும் மாற்றுவது என்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தாலுகாவின் தலைமையிடமாகவும், வளர்ந்து வரும் தொழில் நகரமாகவும் திக ழும் பெருந்துறையின் வளர்ச்சிக் கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் அரசின் நோக்கத் தினை நிறைவேற்றிட எந்த வகையி லும் இது பயன் தராது. ஆகவே, தாங்கள் தலையீடு  செய்து கருமாண்டிசெல்லிபாளை யம் பேரூராட்சியைப் புதிதாக அறி விக்கப்பட்டுள்ள பெருந்துறை நக ராட்சியுடன் இணைக்க உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என அதில் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

தருமபுரி, ஜன.11- பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, பென்னாகரம் பகுதியில் இருந்து  கிராமப்புற பகுதிகளுக்கு இரவு நேரங்க ளில் கூடுதல் பேருந்து இயக்க வேண் டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங் களைக் கொண்ட பகுதியாகும். இப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள், இளை ஞர்கள் வேலை தேடி சென்னை, மதுரை,  கோவை, திருப்பூர் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு கட்டட வேலை, தொழிற்சாலைகள், ஹாட் சிப்ஸ் கடைகள் உள்ளிட்ட பல் வேறு பணிகளுக்காக செல்கின்றனர். தீபாவளி, பொங்கல் மற்றும் இதர விடு முறை நாட்களில் சொந்த ஊருக்கு  திரும்புகின்றனர். இந்நிலையில், பொங் கல் பண்டிகைக்கு செவ்வாயன்று முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வேலைக்குச் சென்று வீடு திரும்புவோர், பண்டிகைக்  கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே வர வாய்ப்புள் ளது. இதனால் தருமபுரி பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கும், பென்னாகரம் பகுதியில் இருந்து ஏரி யூர், தாசம்பட்டி, ஒகேனக்கல், முதுகம் பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  உள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் இரவு  நேரங்களில் கூடுதலாக பேருந்து வசதி  செய்து தர வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் புத்தகத் திருவிழா பிப்.1இல் துவக்கம்

நாமக்கல், ஜன.11- நாமக்கல் புத்தகத் திருவிழா பிப்.1 முதல்  10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாமக்கல்லில் மூன்றாம் ஆண்டாக புத்த கத் திருவிழாவை சிறப்புடன் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், வெள்ளி யன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியர் ச.உமா பேசுகையில், தமிழக அர சின் சார்பில் மாவட்ட வாரியாக புத்தகத் திரு விழா நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாவது ஆண்டாக நடை பெறும் புத்தகத் திருவிழா, நாமக்கல் தெற்கு  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்.1  முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள் ளது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்கு கள், ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட் டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறு கிறது. இதில் மருத்துவ முகாம், உணவு அரங்குகளும் இடம் பெறுகின்றன. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்ய வேண்டும். இந்த புத்தகத் திருவிழா  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல்  அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகை யில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும், என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மைத் திட்ட இயக்குநர் சு.வடிவேல், திட்ட  இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கோட்டாட்சியர்கள் ஆர்.பார்த்திபன், (நாமக் கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித் துணை ஆட்சியர் ச.பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.