உடுமலை, ஜன.11- தைப் பொங்கலுக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகை யில், கொண்டாட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தது. மடத்துக்குளம் பேரூராட்சியில் ஜனவரி 13ஆம் தேதி புகை யில்லா போகிப் பண்டிகை கொண்டாடும் வகையில், பழைய பொருட்களை பொது மக்களிடம் சேகரிக்கும் நிகழ்ச்சி மடத்துக்குளம் மத்திய பேருந்து நிலையத்தில் துவக்கப் பட்டது. தூய்மைப் பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.