நாமக்கல், ஜன.22- மோகனூர் நகராட்சியுடன் 4 கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் உண்ணா விரத இயக்கத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி நகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் எனவும், அதே நேரத்தில் மணப் பள்ளி, பேட்டப்பாளையம், ராசிபாளையம், குமரிபாளை யம் ஆகிய 4 கிராம ஊராட்சிகளும் அதனுடன் இணைக்கப்ப டும் என தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது. இதற்கு அக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோகனூர் பேரூராட்சி அலுவல கம் அருகே உள்ள திடலில் புதனன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத இயக்கம் நடை பெற்றது. அப்போது, கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும். குடிநீர் வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயரும். எனவே, தமிழக அரசு இத்தகைய முடிவை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மோகனூர் வட்டாட்சியர் மணிகண்டன் பேச்சுவார்த்தை மேற் கொண்டார். அப்போது, முறையாக உங்களது கோரிக்கை களை மனுவாக எழுதி கொடுங்கள். உண்ணாவிரதம் நடத்த அனுமதியில்லை என்பதால், கலைந்து செல்லுங்கள். உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடமும், தமிழக அரசி டமும் தெரிவிக்கப்படும், என உறுதியளித்தார். அதனை யேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.