திருப்பூர், ஜன.31- திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங் கள் வாங்குவதற்காக கிராமப்புற பள்ளி மாணவர் ஒருவர் உண்டிய லில் மூவாயிரம் ரூபாயை சேமித் துள்ளார். திருப்பூர் ஒன்றியம், பெருமாநல் லூர் அருகே உள்ள கருக்கங்காட்டு புதூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் பனியன் கம்பெனியில் அயரன் மாஸ்டராக வேலை செய்து வருகி றார். இவரது மனைவி பூவாசுகி தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் தா. விஷ்விந்த் (11). இவர் அப் பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை முன் னிட்டு மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, புத்தகங் கள் வாங்கி வாசிக்க செய்வதற்காக குழந்தைகளுக்கு ஒரு லட்சம் உண் டியல்கள் வழங்கும் திட்டத்தை புத்தகத் திருவிழா குழுவினர் அறி முகப்படுத்தினர். அதன்படி நன் கொடையாளர்கள் மூலம் திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் அரசு மற்றும் தனியார் பள் ளிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள் வழங்கினர். உண்டியல் பெறும் மாணவர்கள் அதில் சிறுக சிறுக சேமிக்கும் தொகையைக் கொண்டு புத்தகத் திருவிழாவில் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வாங்க லாம் என்று அவர்களுக்கு சொல்லப் பட்டது. இதன்படி மாணவன் தா.விஷ் விந்த், அவருக்குத் தரப்பட்ட உண்டி யலில் தினமும் பணம் சேமித்தார். வியாழக்கிழமை அப்பியாபாளை யம் பள்ளி மாணவர்கள் புத்தகக் கண்காட்சியை காண்பதற்கு வருகை தந்திருந்தனர். அப்போது தா.விஷ் விந்த் தனது உண்டியலில் சேமித்த பணத்தை உடைத்துப் பார்க்கை யில் மொத்தம் ரூ. 3 ஆயிரம் இருந் தது. ஒவ்வொரு நாளும் தனது பெற் றோர் வழங்கிய பணத்தை செலவு செய்யாமல் உண்டியலில் சேமித்து வைத்ததாக அந்த மாணவர் கூறி னார். இந்த பணத்தைக் கொண்டு புத்தகக் கண்காட்சியை பார்வை யிட்ட தா.விஷ்விந்த் திருக்குறள் உள் ளிட்ட புத்தகங்களை வாங்கியதாக உற்சாகத்துடன் தெரிவித்தார். அவருடன் வந்த மாணவர்கள் உண்டியலில் பணம் சேர்த்தார் களா? என்று கேட்டபோது, தனது நண்பர்கள் அனைவருமே உண்டி யலில் பணம் சேமித்தார்கள். எனி னும் அவர்கள் குறைவான தொகை தான் சேமித்திருந்தார்கள், என்று கூறினார். குறுகிய நாட்களில் அதிக பட்சமாக ரூ. 3000 சேமித்து புத்தகத் திருவிழாவில், புத்தகங்கள் வாங் கிய ஐந்தாம் வகுப்பு மாணவர் தா. விஷ்விந்த்திற்கு, அப்பியாபா ளையம் பள்ளி ஆசிரியரும், புத்த கத் திருவிழா குழுவினரும் பாராட்டு தெரிவித்தனர்.