districts

img

தேன்கூட்டை அப்புறப்படுத்தக் கோரிக்கை

திருப்பூர், ஜன.22- இடுவம்பாளையம் அங்கன்வாடி மையத்தின் அருகில்  உள்ள மேல்நிலை தொட்டியில் கட்டப்பட்டுள்ள  தேன்கூட்டை  மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி, 40 ஆவது வார்டுக்குட்பட்ட  இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி  600 பேர் படிக்கின்றனர். மேலும், அங்கன்வாடி மையத்தில்  40 குழந்தைகள் படிக்கின்றனர். இந்நிலையில் இந்த அங்கன் வாடி மையத்தின் அருகில் உள்ள மேல்நிலை தொட்டியில் தேன்கூடு உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை தேனீ கடிக்க வாய்ப்புள்ளது. மேலும்,  பள்ளி மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் சிலர் தேன்  கூட்டின் மீது கல் எறிவதால் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்ப டுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தேன்கூட்டை அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.