districts

img

பாதைகளை சரி செய்யும் மலைவாழ் மக்கள்: மனிதாபிமானம் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் அரசு

உடுமலை, நவ.22- மலைப்பகுதியில் இருக்கும்  மலைவாழ் மக்கள் குடியிருப்புக ளுக்கு செல்லும் பாதைகள் கடந்த மாதம் முதல் பெய்து வரும் மழை யால், கடுமையாக சேதம் அடைத் துள்ளன. பாதைகளை சரி செய்யக்   கோரிய இம்மக்களின் கோரிக்கைக ளுக்கு  அலுவலர்கள் செவிசாய்க் காததால், மலைவாழ் மக்களே பாதைகளை சரி செய்து வருகின் றனர். உடுமலை தாலுகாவில் இருக் கும் மலைப்பகுதியில் குருமலை, மாவடப்பு, குழிப்பட்டி, மேல் குரு மலை,  பூச்சி கொட்டாம்பாறை, கரு முட்டி, காட்டுப்பட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டுமலை, பொருப் பாறு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மூங் கில் பள்ளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை பகுதிக ளுக்கு மக்கள் நடைபாதையாக திருமூர்த்தி மலை அடிவார பகுதி யில் இருந்து சென்று வருகின்றனர்.  வாகனங்கள் மூலம் செல்ல வேண் டும் என்றால் வால்பாறை செல்லும்  வழியில் உள்ள காடம்பாறையில் இருந்து கரடு முரடான மலை பாதை யில் செல்ல முடியும். மேலும் கோடந்தூர், தளிஞ்சி வயல் குடியி ருப்பு பகுதிக்கு மூணார் சாலை யில் சென்று பின்னர் மலைப்பாதை யில் செல்ல வேண்டும். கடந்த மாதத்தில் இருந்து பருவ  மழை தொடர்ச்சியாக பெய்து வரு கிறது. இதனால் குடியிருப்புக ளுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத  நிலையில் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் மக்க ளின் அன்றாட தேவைகளான  மருத் துவம், ரேசன், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், பள்ளிகளுக்கு சென்று வர முடி யாத இக்கட்டான சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால், சேதம டைந்த பாதைகளை சரி செய்ய உடுமலை வருவாய் துறை  அலுவலர்கள் எந்த நடவடிக்கை யும் எடுக்காததால், குழிப்பட்டியில்  இருந்து  குருமலை குடியிருப்புக்கு செல்லும் பாதையை தற்காலிக மாக  மலைவாழ் மக்களே ஒன்றி ணைந்து சரி செய்து வருகின்றனர். திருமூர்த்தி மலையில் இருந்து  சுமார் ஆறு கிலோ மீட்டர் சாலை  அமைக்க அரசு வழங்கிய அனுமதி யின் படி சாலை அமைத்தால், மலை வாழ் மக்களுக்கு மருத்துவம் மற்றும் குழந்தைகள் பள்ளிக்குச்  செல்ல மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என்ற கோரிக்கையை  நிறைவேற்ற வேண்டும் என மலை வாழ் மக்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக மேல் பகுதி யில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் இன்று வரை உடு மலை வருவாய்த்துறை அலுவலர் கள் மலைவாழ் மக்களின் குடியி ருப்பு பகுதிகளில் மக்களின் நிலை  என்ன என்ற ஆய்வுகளை கூட நடத் தவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.