districts

img

உதகையில் சாக்லெட் திருவிழா துவங்கியது!

உதகை, டி.21- கிருஸ்துமஸ் மற்றும் புத் தாண்டு பண்டிகையை வர வேற்க்கும் விதமாக உதகை யில் 15 நாள் சாக்லெட் திருவிழா வெள்ளியன்று தொடங்கியது.  ஹோம் மேட் சாக்லெட் என்றால் அனைவரின் நினை விற்கு வருவது உதகை தான். இதமான காலநிலை இங்கு நிலவுவதால் தமிழகம் மற்றும் கேரளம் மாநிலங்களில் சாகு படி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோகோ விதைகள் வரவழைக்கபட்டு அரைத்து அவற்றுடன் கோகோ பட்டர் மற்றும் கரும்பு சர்க்கரை  சேர்த்து ஹோம் மேட் சாக்லெட் தயாரிக்கப் படுகிறது. இந்த சாக்லெட்டுகளை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். உதகையில் சாக்லெட் தயாரிப்பாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட் திருவிழா  நடத்தபடுகிறது. இந்த ஆண்டு  கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டி கையை வரவேற்க்கும் விதமாக 15 நாள் சாக் லெட் திருவிழா வெள்ளியன்று தொடங்கி யது.  இதில், டார்க், மில்க், ஒய்ட் என மூன்று ரகங் களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை ஆகியவற்றின் மூலம் 160 வகையான ஹோம் மேட் சாக்லெட்கள் காட்சிப்படுத் தபட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, தைலம், யூக்கோலிப்டஸ், ரோஸ்மேரி, ஊட்டி  வர்க்கி, டீ, காபி உள்ளிட்ட பொருட்களின் வடிவில் 40 வகையான சாக்லெட் வகைகள் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந் துள்ளது. மேலும், உத கையில் ஆங்கி லேயர் காலத்தில்  கட்டபட்ட புகழ்பெற்ற பிரீக்ஸ் பள்ளிக்கு  150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  100 கிலோ சாக்லெட்டை கொண்டு பள்ளி யின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ‘மேனிகுயின்’ எனப்படும் பொம் மைகளும், பெண்கள் அணியும் ஆபர ணங்களும் சாக்லெட் மூலம் தயாரிக்கப் பட்டு  காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. ரூ.60  முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கபட்டுள்ள பல வகையான சாக்லெட் களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.