தெப்பக்காடு செல்லும் குட்டியானை
கோவை, டிச.30- தாயை பிரிந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வி யடைந்த நிலையில், முது மலை தெப்பக்காடு யானை முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவெ டுத்துள்ளனர். கோவை அருகே உள்ள வரபாளையத்தில் பெண் யானை உயிரிழந்தது. அதன் ஒரு மாதமே ஆனா குட்டி மீட்கப்பட்டது. அந்த குட்டி யானையை யானைகள் கூட் டத்துடன் வனத்துறையினர் சேர்க்கும் முயற்சி செய்து வந்தனர். ஆனால் முடிய வில்லை. பொன்னுத்தம்மன் கோவில் அருகே முகாமிட்டு உள்ள யானைகள் கூட் டத்தை பார்த்ததும் அந்த குட்டி யானை பிழிறியபடி அவற்றை நோக்கி ஓடினா லும், அந்த யானைகள் கூட் டம் குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் மிரண்டு ஓடி வருகிறது. ஞாயிறன்று மீண் டும் வனத் துறையினர் முயற்சி செய்த போது முடிய வில்லை. எனவே, குட்டி யானை தற்பொழுது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால், நீலகிரி முது மலை தெப்பகாடு யானை முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
சைனிக் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்
சைனிக் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் உடுமலை, டிச.30 - உடுமலை அமராவதி நகரில் இருக்கும் சைனிக் பள்ளியில் நடப்பு ஆண்டு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற இணைய முகவரியை பள்ளி நிர்வாகம் அறிவித்து உள்ளது. அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்விற் கான ஆன்லைன் விண்ணப்பப்பம் 24 டிசம்பர் 2024 முதல் தொடங்கிங்கியுள்ளது. https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண் டும். 6ஆம் வகுப்பு பள்ளியில் சேர விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் மார்ச் 31 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் செய் யும் மாணவர்கள் மார்ச் 31 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். சேர்க்கைகயின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவிநாசி பைனான்சியர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் ஏழு பேருக்கு சிறை
அவிநாசி பைனான்சியர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் ஏழு பேருக்கு சிறை அவிநாசி, டிச.30- திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாமரை கார்டனைச் சேர்ந்த வர் ரமேஷ். டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை கோவை - சேலம் ஆறு வழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, காரில் வந்த ஐந்து பேர், ரமேஷை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இவ்வழக்கில் ரமேஷின் மனைவி விஜயலட்சுமி பணம் கொடுத்து கொலையாளி களை ஏவி கணவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனடிப்படையில், விஜயலட்சுமியுடன், இர்ஃபான், ஜானகி ராமன், கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸ், சரண், ஜெய பிரகாஷ் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் குற்றவாளி சரண் தவிர ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறை வைக்க மாவட்ட ஆட்சி யர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை
உடுமலை, டிச.30 - உடுமலை திருமூர்த்தி மலை பகுதியில் மழை பெய்ததால், திங்களன்று பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிக ளுக்கு தடைவிதிக்கபட்டது. இம்மாத துவக்கத்தில் மலைப் பகுதியில் கனமழை பெய்த தால், பத்து நாட்களுக்கு மேல் அருவிக்குச் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. கடந்த வாரம் மலைப்பகு தியில் மழை இல்லாததால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டிச.23ஆம் தேதி முதல் அனுமதிக்கபட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி திங்கட்கிழமை காலை முதல் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகத் தினர் தெரிவிக்கையில், உடுமலை திருமூர்த்தி மலையில் சுற் றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கும் வகையில் செயற்கை யாக உருவாக்கப்பட்ட பஞ்சலிங்க அருவியில் மழைக் காலங் களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை பெய்யும்போது அருவி மற்றும் கோவிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பட்டியலின மக்கள் குடியிருப்பிற்கு சாலை அமைக்க பாஜக, அதிமுக எதிர்ப்பு: பாதிக்கப்பட்டோர் தற்கொலை முயற்சி
சேலம், டிச.30- ஓமலூர் அருகே பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, அதிமுக நிர்வாகிகளைக் கண்டித்து, பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள எஸ்.காட்டுப்பட்டி, செலவடை பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த னர். இதையடுத்து அங்கிருந்த போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி, பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தாங்கள் இரண்டு தலைமுறையாக எந்த அடிப் படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றோம். தங்கள் பகுதிக்கு அதி முகவைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலை வராகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் வார்டு உறுப்பினர்களாகவும் உள்ளனர். எங்கள் பகுதியில் சாலை அமைக்க அதி முக, பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். சாலை, மய வசதி செய்து தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் முறை யிட்ட போது என்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரிக்கிறார். எனவே, தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
விசாகா கமிட்டி அமைக்க கோரிக்கை
விசாகா கமிட்டி அமைக்க கோரிக்கை சேலம், டிச.30– மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும், என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று அளித்த மனுவில், கல்வி நிலை யங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். மாண விகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு உடனடியாக மக ளிர் காவலர்களை அதிகமாக பணியமர்த்த வேண்டும். பெண் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி நிறுவ னங்கள், பெண்கள் பணியிடங்களில் சட்டபூர்வமாக விசாகா கமிட்டி அமைத்து, பெண்களின் பாதுகாப்பை உறுத்தி செய்ய வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயானப் பாதையை அகற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
மயானப் பாதையை அகற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு தருமபுரி, டிச.30- நல்லம்பள்ளி அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப் பட்ட மயானப் பாதையை அகற்றும் நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், எனக்கோரி பொதுமக்கள் தரும புரி ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், எச்சனஅள்ளி ஊராட்சி, குட்டம்பட்டி கிராமத் தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மயானத்திற்கு செல்லும் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இப்பாதை வழியாக இக்கிராம மக் கள் இறந்தவர்களை எடுத்து சென்று அடக்கம் செய்து வந் தோம். இந்நிலையில், தனிநபர்கள் சிலர் மக்கள் பயன்பாட்டி லிருந்த மயானப் பாதையை ஜேசிபி இயந்திரம் கொண்டு குழித்தோண்டி துண்டித்துள்ளனர். மேலும், புதியதாக அமைக்கும் சாலை, நீண்ட தூரம் சுற்றி செல்வது டன் நீர்வழித்தடத்தில் போடப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த வழியே செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, புதிய பாதை போடுவதை தடுத்து நிறுத்தி, 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பழைய பாதையை சீரமைக்க வேண்டும். மேலும், பாதையை துண்டித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள் ளது.