districts

img

திருப்பூரில் சைனா பூண்டு 330 கிலோ பறிமுதல்

திருப்பூர், டிச.4- தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சைனா பூண்டு 330 கிலோவை உணவு  பாதுகாப்புத்துறையினரின் புதனன்று பறிமுதல் செய்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் பகுதி யில் தினசரி சந்தை மற்றும் வெங்காயம்,  பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட் டவை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய மண்டிகள் செயல்பட்டு வருகின் றன. இந்த மார்க்கெட்டிற்கு ஊட்டி,  இமாச்சல் பிரதேஷ், ஜம்மு காஷ்மீர்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு  விற்பனைக்காக கொண்டுவரப்படுகி றது. தற்போது பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக பூண்டு விளைச் சல் பாதிக்கப்பட்டுள்ளதால், பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. இச்சூ ழலை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள சீனா பூண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். தமிழக முழுவதும் உள்ள மார்க் கெட்டுகளில் உணவு பாதுகாப்புத்துறை யினர் சீனா பூண்டுகள் விற்பனை உள் ளதா என்பது குறித்து சோதனை மேற் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகு தியாக திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சோதனை மேற் கொண்டனர். அப்போது கடை ஒன்றில்  22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 330  கிலோ சீனப் பூண்டுகள் கண்டறியப் பட்டது. அவற்றின் மாதிரிகளை பரிசோ தனைக்காக எடுத்துச் சென்ற உணவு  பாதுகாப்புத்துறையினர் 330கிலோ  பூண்டையும் பறிமுதல் செய்துள்ளனர். அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பல்வேறு ரசாயனங்கள் சேர்க் கப்படுவதால் உடலுக்கு உபாதை ஏற்ப டுத்தக்கூடிய வகையிலான இந்த பூண் டுகளை வியாபாரிகள் விற்பனை செய் யக்கூடாது என உணவு பாதுகாப்புத்து றையினர் அறிவுறுத்தினர்.