நாமக்கல், பிப். 24- கல்குவாரி குறித்து தகவல் தெரி விக்காத 2 வி.ஏ.ஓ க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து, நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே உள்ள கொண்டப் பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கரடு புறம்போக்கில் உரிய அனுமதி யின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வரு வாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி நாமக்கல் வருவாய் கோட்டாட் சியர் பார்த்தீபன் தலைமையிலான வரு வாய்த்துறையினர், போலீசாருடன் சம் பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த னர். அப்போது அங்கு கல் உடைத்து கொண்டு இருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள் அதிகாரி களை கண்டவுடன் அங்கிருந்து தப்பி யோடி விட்டனர். இதை தொடர்ந்து அந்த கல்குவாரியில் நிறுத்தப்பட்டு இருந்த பாறைகளை உடைக்கும் கிட் டாச்சி எந்திரம், கம்பரசர் டிராக்டர்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் உள் பட 23 வாகனங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறி கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜான் பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகிலா ஆகிய இருவரையும் நாமக்கல் ஆர்.டி.ஓ பார்த்தீபன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் நாமக்கல் கொண்ட மநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படங் களுடன் புகார் மற்றும் தகவல் தெரி வித்திருந்தபோதும், பழிவாங்கும் எண்ணத்துடனே, வி.ஏ.ஓ க்கள் ஜான் போஸ்கோ, கோகிலா ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்ப தாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு கிராம நிர் வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ க்கள் நாமக் கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு திங்களன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். வி.ஏ.ஓ க்கள் மீது உள்ள சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அவர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து விஏஓக்கள் இந்த போராட்டத் தில் பங்கேற்றதால் வழக்கமாக நடை பெறும் அலுவலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.