districts

img

திருப்பூரில் 17 முதல்வர் மருந்தகங்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர், பிப்.24 - திருப்பூர் மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  4 தொழில் முனைவோர்கள் மூலம் மொத்தம் 17 முதல்வர்  மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளன என்று மாநில தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு  முழுவதும் ஆயிரம் முதல்வர் மருத்தகங்களை திறந்து வைத் தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில்  முதல்வர் மருத்தகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இதுகுறித்து  அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் பழங்கரை,  சோமவாரப்பட்டி, ருத்ராபாளையம், முத்தூர், வெள்ளக்கோ வில், தளி, ஊத்துக்குளி, அவிநாசி, சின்னவீரம்பட்டி, கரடிவா வி, மங்கலம், சிவன்மலை, பெருமாநல்லூர் ஆகிய பகுதி களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களில் முதல்வர் மருத்தகங்கள் அமைய உள்ளன. மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள்,  4 தொழில் முனைவோர் மூலம் முதல்வர் மருந்தகம் அமைக் கப்படவுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  திருப்பூர்  நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.