கோவை, ஜன.22- வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு தலைமையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மாநி லம் முழுவதும் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் புதனன்று ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும். 115 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சங்கத்தினர் புத னன்று தமிழகம் தழுவிய சிறை நிரப் பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்ஒருபகுதியாக, கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, இதில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேள னத்தின் துணை பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், சிஐடியு மாவட்டத் தலை வர் கே.மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரம சிவம், பொதுச்செயலாளர் வேளாங் கன்னி ராஜ், பொருளாளர் மனோஜ் குமார் மற்றும் ஓய்வு பெற்றோர் சங் கத்தின் நிர்வாகி அருணகிரிநாதன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான் சன் கென்னடி மற்றும் ஜெகநாதன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத் தலைவர்கள் ஆர்.ரகுராமன், என்.முருகையா, ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மண்டலத் தலைவர் கே.மாரப் பன் மற்றும் பொருளாளர் அய்யாசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மறி யலில் ஈடுபட்டு கைதாகினர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, போக்குவரத்து சங்க மண்டல துணைத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், மண்டல துணைப்பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அனைத்துதுறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார் கோரிக்கை களை விளக்கி பேசினார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்த னர். சேலம் சேலம், மெய்யனூரிலுள்ள போக்கு வரத்து கழக பணிமனை முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்கத் தின் மண்டலத் தலைவர் செம்பன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கோவிந்தன், போக்குவ ரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் சேகர், அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகேசன், நிர்வா கிகள் மணிமுடி, பி.முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கைதாகினர். தருமபுரி தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, போக்குவரத்து ஊழியர் சங்க மண்ட லத் தலைவர் சி.முரளி தலைமை வகித் தார். மண்டல பொதுச்செயலாளர் எஸ். சண்முகம், நிர்வாகி மனோன்மணி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், அனைவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.
10 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் அகவிலைப்படி!
இதுகுறித்து, எம்.கனகராஜ் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள் மற்றும் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். குறிப்பாக, ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப் பலன் களை இரண்டு ஆண்டுகளாக அரசு கொடுக்கவில்லை. அதுவே ரூ.4000 கோடி அரசு பாக்கி வைத்துள்ளது. குறிப்பாக, ஓய்வு பெற்ற ஊழியர்களின் பி.எப், கிராஜூ விடி உள்ளிட்ட பணப் பலன்களை ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அக விலைப்படியை உயர்த்தி வழங்கக்கோரி உச்சநீதிமன் றம் தீர்ப்பு வழங்கியும், அரசு மேல்முறையீடு செய்து அது வும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 115 மாதங்களாக தமிழக அரசு அகவிலைப்படி கொடுக்க மறுத்து வருகிறது. இது 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஊதிய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளாக இருந்து, நான்கு ஆண்டுகளாக மாற்றியது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் தற்போது ஐந்தாண்டுகளை எட்டியும் பேச்சுவார்த்தை நடத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கை இல்லை. உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், என்றார்.