districts

img

நோயாளி கட்டிலில் நாய் உறங்கிய வீடியோ வைரல் அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

சிதம்பரம், ஜன. 22- சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.   இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 1000-த்திற்கும் மேற்பட்ட புறநோயாளி கள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் சுற்றுவட்டார மாவட்டங்க ளில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மருத்துவமனையில் 12-வது வார்டில்  உள்ள கட்டில் மெத்தை யில் நாய் உறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தேரசனிடம்  கேட்ட போது, சம்பந்தப்பட்ட நாய்கள் படுத்தி ருந்த வார்டு முழுவதும் தடை செய்யப் பட்ட பகுதியாக உள்ளது. அந்த வார்டுக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்பு வைத்து அடைத்திருந்தோம். இரவு மற்றும் பகல்  நேரத்தில் நோயாளிகளுக்கு உதவியாக வரு பவர்கள் அங்கே சென்று படுத்து, ஓய்வு எடுப்பது அதே இடத்தில் சாப்பிட்டு விட்டு உணவு பொட்டலங்களை போட்டு விடு கிறார்கள். நாய்கள் அந்த வார்டுக்கு வந்து இருக்கலாம். பயன்படுத்தாத வார்டு என்பதால் ஊழி யர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.  தடை செய்யப்பட்ட வார்டுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியும் சிலர் செய்த தவறான செயல்பட்டால் அதேபோல் நடந்து விட்டதாக கூறினார்.