districts

img

விழுப்புரத்தில் நடன பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு

விழுப்புரம், ஜன.11- விழுப்புரத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடன பள்ளி மாண வர்களுக்கு  போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தேசிய போக்குவரத்து விழிப்புணர்வு மாத விழாவை யொட்டி இத்ற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் தலைமை தாங்கினார்.  இதில் விழுப்புரம் இமேஜ் நடன பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  போக்குவரத்து விழிப்புணர்வு நடனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் குமாரராஜா, விஜியரங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.