சென்னை, ஏப். 26 - மதம் அவரவர் தனிப்பட்ட உரிமை. அரசியலில் மதம் கலக்கக்கூடாது. அரசுக்கு மதச்சார்பு இருக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வா யன்று (ஏப்.26) சைதாப்பேட்டையில் நடை பெற்றது. தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: உழைப்பாளிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். உழைப்பா ளிகளுக்கு ஆதரவாக சமூகம் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் உழைப்பாளிகளிடம் இருக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட்டுகள் போராடு கிறோம். கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை எதிரி களாக ஆர்எஸ்எஸ் வரை யறுத்துள்ளது. மதம் அவ ரவர் உரிமை. மதம் கூடாது என்று மார்க்சிஸ்ட்டுகள் கூறவில்லை. அரசுக்கு மதம் கூடாது. மதச் சார்பற்ற அரசுதான் நடை பெற வேண்டும். மதச் சார்பின்மையை வலியுறுத்து வதால் கம்யூனிஸ்டுகளை ஆர்எஸ்எஸ் எதிரியாக பார்க்கிறது. ஹிஜாப் உடையை வைத்து இஸ்லாமிய பெண்களின் கல்வி உரிமையை மறுத்து வரு கின்றனர். டெல்லியில் இஸ்லாமியர்களின் வீடு களை இடித்தபோது மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் பிருந்தாகாரத் புல்டோச ருக்கு முன்பு நின்று அதை தடுத்து நிறுத்தினார். சிறுபான்மையினர் உரி மைக்காக்க களத்தில் நிற்பவர்களாக கம்யூனி ஸ்ட்டுகள் உள்ளனர். இந்து மதத்திற்கு பாஜக-வால்தான் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவா கொள்கை கொண்ட அரசால் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க, கேடயமாக இருக்கிறோம் என்பதை உணர்த்த இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறோம். பெட்ரோல், அரிசி கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் நிலை நோக்கி செல்கிறது. இத்தகைய விலைவாசி உயர்வை திசை திருப்ப சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவுகின்றனர். பகுத்தறிவு கொண்ட திமுக, கம்யூனிஸ்ட்டுகளால் தமிழகத்தில் மதமோதல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில் மதநல்லி ணக்கத்தை வலியுறுத்திய நேருவையும், மதக்கல வரங்களில் இருந்து அமைதியை நிலைநாட்டிய காந்தியையும் ஆர்எஸ் எஸ்க்கு பிடிக்காது. மதச்சார் பின்மையை சீர்குலைத்து இந்தியத் தன்மையை மாற்ற சங்பரிவார் கும்பல் முயற்சிக்கிறது. பாஜக-வை தவிர்த்த கட்சிகள் மதச்சார்பின்மைக்காக போராடி வருகின்றன. வகுப்புவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என்றார்.
தாவூத் மியான்கான்
காயிதேமில்லத் கலை அறிவியல் கல்லூரி யின் தாளாளர் தாவூத் மியான்கான் பேசுகை யில், இஸ்லாமிய அடை யாளங்களை வைத்து பிரச்சனை எழுப்பி வந்தார்கள். மதச் சார்பின்மையின் அடை யாமாக இந்திய பாது காப்பு படை சார்பில் காஷ்மீரில் நடந்து வந்த இஃப்தார் நிகழ்ச்சியையும் நிறுத்திவிட்டார்கள். டெல்லியில் குடியிருப்பு களை இடித்தபோது மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தாகாரத் புல்டோசர் முன்பு நின்று தடுத்து நிறுத்தியதை நன்றியோடு நினைவு கூர்கிறோம் என்றார். அரசியலமைப்புச் சட்டம், இறையான்மை, மதச் சார்பின்மை, ஜனநாயகம், ஒருங்கிணைப்பு போன்ற வறை ஒன்றிய அரசு அழித்து வருகிறது. பொதுப்போராட்டத்தில் முன் நிற்பதிலிருந்து இஸ்லாமியர்களை தனி மைப்படுத்த குறிவைத்து தாக்குகின்றனர். இந்தியா வின் பன்முகத்தன்மையை பாதுகாக்க இந்திய மக்களின் போராட்ட வீறு கொண்டு எழும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் தலைமை தாங்கி னார். பொருளாளர் கே.மணி கண்டன் வர வேற்றார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.பாக்கியம், சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், எம்.ஸ்ரீதரன் எம்.சி.,, பாதிரியார் எஸ். செல்வின்துரை, கே. முஹம்மது ஷப்பீர் அலி உள்ளிட்டோர் பேசினர். ஜெ.ஜூலியட் நன்றி கூறினார்.