சென்னை,பிப்.28- உலக அளவில் சிறந்த ஸ்மார்ட் போன் பிராண்டான விவோ, பள்ளி மாண வர்களுக்கான 3வது ‘விவோ இக்னைட் தொழில்நுட்பம் - கண்டுபிடிப்பு போட்டி’யை நடத்துகிறது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள 660 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 9,000 பள்ளிகளில் இருந்து 37,000க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ள தாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் இடையே அதிகரித்து வரும் வரவேற்பை காட்டு வதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இதில் இருந்து 200 புதுமையான யோசனைகள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிதி ஆயோக் வரையறுத்த 112 லட்சிய மாவட்டங்களில், 80 மாவட்டங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன, இளம் கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்து வதிலும், இந்தியா முழுவதும் இது போன்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதுமே இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இந்தியா முழுவதும் 8 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘நன்மைக்கான தொழில்நுட்பம்’ என்ற தலைப்பின் கீழ் 5,600க்கும் மேற்பட்ட புதுமையான திட்ட யோசனைகளை தனிநபர் மற்றும் குழுக்களாக சமர்ப்பித்து உள்ள னர். இது ஐக்கிய நாடுகளின் நிலை யான வளர்ச்சிக்கான அவர்களின் பிரச்ச னைகளை தீர்க்கும் திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த அபரிமிதமான பங்கேற்பு, இந்திய இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.