districts

img

சென்னையிலிருந்து திறமையான பொறியாளர்களை பணியமர்த்த திட்டம்

சென்னை, ஜன.31 உலக அளவில் மின்னணு பணம் செலுத்தும் சேவைகள் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் வேர்ல்டு லைன் நிறுவனம் பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை அளிப்பதற்காக சென்னையில் உள்ள 8 பிரபல பொறியியல் கல்லூ ரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. வேர்ல்டுலைன் இந்தியா அதன் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக பேடெக் முன்னோடித் திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடை முறைப்படுத்தி அதன் மூலம் சிறந்த பொறியியல் மாண வர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கு வதாகும். இந்த பேடெக் முன்னோடித் திட்டமானது மாணவர்களுக்கு பயனளிக்கும் அதே வகை யில் அதன் கட்டமைக்கப் பபட்ட தொழில் சார்ந்த பயிற்சியானது நிறு வனங்களுக்கு இடையி லான இடைவெளியை குறைக்க உதவும். இது மாணவர்களின் செயல் பாடுகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதோடு, அவர்களின் வேலை வாய்ப்புக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் என்று பேடெக் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேர்ல்டுலைன் செயல் தலைவர் தீபக் சந்தனானி கூறினார். முன்னதாக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி)  சென்னை இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி, ஜேப்பியார் , எஸ்ஆர் எம்,செயின்ட் ஜோசப், பிஎஸ்ஏ கிரசண்ட், ஸ்ரீவெங்கடேஸ்வரா, ராஜ லட்சுமி ஆகிய பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.