செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் ரூ 52 கோடியில் அமைக்கும் பணியை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் உடன் இருந்தனர்.