districts

img

ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, ஆக. 25- துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், ரூ.60  லட்சம் மதிப்புள்ள 1.38 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபா யில் இருந்து எமிரேட்ஸ்  விமானம் மூலம் சென்னை வந்த,27 வயது பயணி ஒரு வரை, சுங்க அதிகாரி கள் இடைமறித்து சோதனை செய்தனர்.  அவர் கொண்டு வந்த  பைகள் வழக்கத்துக்கு  மாறாக அதிக எடையுடன் இருந்தன. அவற்றை  சோதனை செய்தபோது, அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்  குழாய்களால் வடிமைக்கப்பட்ட, சமையலறை அலமாரி  இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 1.38 கிலோ எடை யுள்ள தங்க கம்பிகள்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்களுக்  குள், மறைத்து வைக்கப்பட்டிருந்தன. நூதன முறையில் கடத்தி வரப்பட்ட இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்  மதிப்பு ரூ.60 லட்சம். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக,  சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர்  தெரி வித்துள்ளார்.