சென்னை, ஏப். 12- சென்னை விமான நிலையத் தில் ரூ.2.01 கோடி மதிப்புள்ள 4.171 கிலோ தங்கத்தை சுங்கத் துறை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர் ரகசிய புலனாய்வு தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து விமானத்தில் வந்த 5 பயணி கள் மற்றும் மற்றொரு விமானத்தில் வந்த 2 பயணிகளை சுங்கத் துறை விமான நிலைய நுண்ணறி வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். முதல் நிகழ்வில் 2.493 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்க கட்டிகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.20 கோடியாகும். இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததுடன் பயணி ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இரண்டாவது நிகழ்வில் கொழும்பு வில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளிட மிருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 992 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரை சோத னையிட்டதில் 686 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு 33.05 லட்ச ரூபாயாகும். அந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் குறித்து மேலும் விசா ரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.