districts

விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம் ,பிப்.1-  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடை மைகளை சுங்க இலாகா அதி காரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.25 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.  சார்ஜாவில் இருந்து விமா னத்தில் வந்த வாலிபரின் காலில் இருந்த ‘ஷூ’வில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள இருந்து 625 கிராம் தங்கத்தை கைப்பற்றி னர். இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயி ரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த னர். இது தொடர்பாக 4 பேரை யும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பின்ன னியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.