சென்னை, ஏப்.5- துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சகுபார் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் சகுபார் அலியின் உடலில் ஒரு தங்கப் பொட்டலமும், முகமது ஜபீரின் உடலில் இரண்டு தங்கப் பொட்டலங்களுமாக மொத்தம் மூன்று பொட்ட லங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களிடமிருந்து ரூ. 11.83 லட்சம் மதிப்பில் 253 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வ தேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.