districts

விமானத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

ஆலந்தூர், மார்ச் 2- குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம்  தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதுதொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணி கள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. தங்கம் கடத்தி வந்தவர் கொடுத்த தகவலின் படி அதனை வாங்க விமான நிலையத்தில் காத்திருந்த ஒருவரையும் அதிகாரிகள் பிடித்தனர். கைதான 2 பேரிட மும் விசாரணை நடந்து வருகிறது.