சென்னை, ஏப். 9 - மாநிலங்களிடமிருந்து வரிகளை பறித்துக் கொள்ளும் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை கூட தர மறுக்கிறது. இதனால் உள்ளாட் சிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சாடினார். சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சனிக்கிழமையன்று (ஏப்.9) தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதன் மீது விவாதம் நடைபெற்றது. 1ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் பேசியது வருமாறு:- நிதி நிலை அறிக்கையில் 150 கோடி ரூபாய் வட்டி செலுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. 788 கோடி ரூபாய் பற்றாக்குறையும் காட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ கத்திற்கு தர வேண்டிய நிதியை வழங் காததே காரணம். தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வரி செல்கிறது. ஆனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுக்கிறது. மாநிலங்க ளுக்கு தர வேண்டிய பங்கு தொகையை முறையாக வழங்கினால் உள் ளாட்சி அமைப்புகள் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். கல்வி, சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கு காரணம் சமூக நீதி (பெரியார், கம்யூனிஸ்டுகள் நடத்திய) போராட்டாம்தான். இருப்பினும், கல்விக்கும், சுகா தாராத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று அங்கன்வாடி மையங்கள் இணைந்து செயல்படும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும். பல பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. அவற்றை புதுப்பிக்க வேண்டும். சமூக நலக் கூடங்களை அதிகப்படுத்த வேண்டும். சமூக நல கூடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்குவதை தடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், தேவையான உபகரணங் களை, பாதுகாப்பு சாதனகளை வழங்க வேண்டும். மாநகராட்சி விதிப்படி மன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பாக கூட்ட பொருள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும். இனி அடுத்தடுத்த கூட்டங்களில் விதியை பின்பற்ற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.