சென்னை,ஜூலை 3-
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ தொலை வுக்கு 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ தொலைவுக்கு 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 44.6 கி.மீ தொலைவுக்கு 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 15 ரயில் நிலையங்க ளில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்பட உள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.